அந்த நாள் பயம் கனவில் வந்தது..
பெண்சில் வாங்க
குமரன் ஸ்டோருக்கு
நடந்து போனான்
தூரத்தில் சித்தப்பனின்
மனைவியைப் போல்
ஒரு பெண்
வயது குறைந்து
அழகாக தெரிந்தார்
ரசிக்க தெரியாதவன்
பயத்தால் பதட்டம்
அடைந்து வலது
பக்கமிருந்து இடது
பக்கமாய் சென்று
தப்பித்தோம் என்ற
களிப்பில் கவனித்தான்
சித்தப்பன் மனைவி
மாதிரி அல்ல
சித்தப்பனின் மனைவியேதான
அதுவும் இவனை
கவனித்த படியே
வலது பக்கமிருந்து
இடது பக்கமாய்
வந்தது. இவனுக்கு
நெஞ்சிலே டிக் டிக்
சத்தம் பலமாக
அடிக்க ஆரம்பித்தது.
இந்த பொம்பளையை
மட்டும் அல்ல
அவன் தெருக்கார
பொம்பளைக என்றாலே
கண்டாலே பயம்தான்
காரணம் தெரிந்தவர்களுக்கு
தெரியும் அறிந்தவர்கள்
அறிவர். தைரியத்தை
வரவழைத்து கொண்டாலும்
நெஞ்சிலே அடிக்கும்
டிக்டிக் அல்ல
திக்திக் யை நிறுத்த
முடியவில்லை.அருகில்
வந்துவிட்டாள்.பாய்ந்து
வலது பக்கம்
சென்றபோது
வலது பக்கம்
வந்தவள் மேல்
மோதிவிட்டான் அடுத்த
கனம் அவளின்
களேபரம் அய்யோ
அவளின் மார்பகத்தை
பிடித்து விட்டானாம்
ஆழ்ந்து தூங்கியவன்
கைகால்களை உதறி
கண் விழித்த
போது கனவென்று
தெரிந்தபோதும்
பயம் மட்டும் போகவில்லை
விடியும் வரை நெஞ்சு
அடித்துக் கொண்டே
இருந்தது இந்த
பயத்தின் முன்
கதைதான் தெரியுமோ....
கனவில் திக் திக்கா ???
பதிலளிநீக்குசண்டையில...மானபங்க படுத்திட்டான்னு பொய் புகார்ல தண்டம் கட்ட வச்சுச்சிருச்சு...அந்த பயம் வந்திருச்சு ..
நீக்கு