ஒரு கடவுள் தந்த சாபமும் வரமும்....
எந்த மதக் கடவுள்னு எனக்கு தெரியல.. ஒரு கடவுளு போலீஸ் மாதிரி மாறு வேடத்தில் வந்து சோதனை செய்துகிட்டு இருந்தப்ப அவருக்கு தாகம் ஏற்பட்டது..கையோடு இருந்த வாட்டர் கேனில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்... பக்கத்தில் தன்னிடம் -வியாபரம் நல்லா போகனுமுன்னு தினமும் வேண்டிகிட்டு இருக்கும் பக்தனான பால் காரன் வீட்டுக்கு போயி தண்ணி கேட்டார்.
அதுக்கு பால்காரன். வந்தியிருக்கிறவர் யாருன்னு தெரியாம.“பால்ல கலக்கவே தண்ணி இல்லாம கஷ்டப்படுறேன் இதுல ஒனக்கு எங்க தண்ணி தர்றது போப்பா”-ன்னு விரட்டி விட்டாரு....
மாறு வேடத்தில் இருந்த கடவுள் நொந்து போயி அங்க சுத்தி இங்க சுத்தி கூட்டமா இருந்த ஒரு இடத்த நோக்கி போயிருக்காரு.....அங்க சாராயத்த குடிச்சிகிட்டு இருந்தாங்க பலபேரு.... மாறு வேடத்தில் வந்த கடவுள் சாரயத்துக்கும் தண்ணிக்கும் வித்தியாசம் தெரியாம சாராய பாட்டில் இருப்பதை தண்ணின்னு நிணச்சு மடக் மடக்ன்னு குடிச்சு தன் தாகத்தை தீர்த்திட்டார்.
தன் தாகத்தை தீர்த்தக் கொண்ட மாறு வேடக் கடவுள் .. எனக்கு தண்ணி தராத பால்காரன் வீட விடாக அலைந்து தண்ணிகலந்த பாலை ஊத்தி பொழைக்ககடவது...என்று சாபம் விட்டார்
தண்ணிதந்து தாகத்தை தணித்த சாராய கடைக்கு மக்கள் அள்ளி அள்ளி கொடுத்து கும்பல் கும்பலாக குடித்துவிட்டு போகக்கடவது என்று வரம் கொடுத்தார். இந்த நிலையில்..
கடவுள் சாபமும் வரமும் கொடுத்த கதையை படித்தேனா..அல்லது கேட்டேனா என்று தவியாய் தவித்த தவியில் கடவுளே ! என் கனவில் வந்து சாபம் விட்டதையும் வரம் கொடுத்ததையும் எனக்கு தெரிவித்தார்..
என்னிடம் வந்து தெரிவித்த கடவளிடம்.... நீர் .வரம் கொடுத்த சாரயத்தை பற்றி நீதி தேவதையிடம் விவரம் கேட்டதால் நந்தினி என்ற செயற்பாட்டாளரும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியுமா கடவுளே என்று கேட்டதுதான் தாமதம் கண்களை திறந்து கடவுளை பாரத்தால் கடவுள் தன் மாறுவேடத்தை கலைத்துவிட்டு ஆளைவிட்டால் போதுமடா சாமின்னு மாயமாக மறைந்து விட்டார்.......
இனி எங்க விடிஞ்சு போச்சு பகல்ல எங்க கடவுள் வரப்போறார் ........
அடடே இது ஸூப்பராக இருக்கிறதே.
பதிலளிநீக்கு.
நன்றி!
நீக்குஆகா அருமையான கனவு
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு