வெறுப்பால் வந்த விழிப்பு
எனது ஏரியாவில் யாரும் சென்ற ஆண்டில் பிளஸ்டூ படிக்கவில்லை. படித்திருந்தாலும் லேப்டாப் கேட்டு வீதியில் இறங்கி இருக்க மாட்டார்கள். பக்கத்து நகரத்தின் தெருவில் உள்ள மாணவர்கள் அனைவரும் சென்ற ஆண்டில் பிளஸ்டூ படித்தவர்கள்... எந்தவித பயம் இல்லாமல் சக மாணவர்களுடன் தெருவில் இறங்கினார்கள்...
அடுத்தவன் சொத்தையும் காசையும் அடுத்தவன் மனைவியும் பயன்படுத்தியவர்கள் சும்மா இருக்க மாட்டாமல்...? தங்கள் ஏவல் படையை ஏவி விட்டனர். அந்த ஏவல் படைக்குதான் எதுவுமே தெரியாதே!
முதலாளி சூ... என்று ஏவி விட்டால் கடிக்க வேண்டும் கடிக்காவிட்டால்..என்ன நடக்கும் அந்த நாய்க்கு..? என்பது நாய் வளர்த்தவர்களுக்கு தெரியும்...அதனால்தான் நாய்கள் முதலாளிகளுக்கு ஏவலால்களுக்கு பாசமாய் இருக்கின்றன.
லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்களை தெரு நாயை போல விரட்டி, அடித்து இழுத்து ச் சென்ற காட்சியைக் கண்டு..இப்படியொரு எண்ணம் தோன்றியது.. போராடிய மாணவர்களின் தாய் தந்தையர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுப்பினர்களாகவோ..ஆதரவாளர்களவோ இருப்பார்கள் அவர்கள் இந்த அடவடித்தனத்தை. கண்டு அந்த கட்சியை விட்டு விலகுவார்களா?
இந்த எண்ணம் தோன்றிய சில நொடிகளில்...மயித்த விலகுவார்கள் என்று அசிசீரி போன்று தோன்றிது..அறிவு கெட்டதுகள். அறிவு இருந்தாலும் சுயநல பேர்வழிகள், சந்தர்ப்பவாதிகள், இன்னும் சொல்லப்போனால் சாய்ந்தா சாய்ற பக்கம் செம்மறி ஆட்டுக் கூட்டமாகத்தான் இருந்து வருகிறார்கள்.....
நியாயமான எந்த போராட்டமானாலும். சரி..முதல் ஆளா குறுக்கே வந்து அடாவடி செய்து வீரத்தை காட்டும் போலீசு படையானது. சுதந்திரம் பெற்றதாக சொல்லபட்ட பிறகு, நியாயமாக நேர்மையாக மக்களுக்காக பாடுபட உருவாக்கப்பட்ட படை அல்ல....200 நூற்றாண்டா ஆண்ட. பிரிட்டீஷ் கம்பெனிக்காரன் தனக்காக உருவாக்கப்பட்ட . ஏவல் படையே இந்த படை..அன்றைக்கு அவனைது கோட்டை கொத்தங்களை காக்காவும் போராடுவர்களை கடித்து குதறவதற்குமாய்.. கறியும் சோறும் சரக்குமா ஊற்றி வளர்க்கப்பட்ட படையே! இன்றும் அதன் மனமும் குனமும் மாறமல் வீரநடை போட்டு வந்து. மிரட்டுவது, குலைப்பது, கடிப்பது..பின் ஒரே போடாக போடுவதுமாக செயல்பட்டு வருகிறது.
இப்படியாக...ஒவ்வொரு போராட்டத்தின் இந்தப்படை எப்படியெல்லாம் தன் வீர பராக்கிரமத்தை காட்டி வந்ததை சமூகத்திலும் சரி,என் சொந்த பிரச்சினையின்அனுபவத்திலும் சரி, எப்படியெல்லாம் இந்த படை நடந்து கொண்டு வந்ததை வெறுப்போடு நிணைத்துக் கொண்டு வந்தபோதே விழிப்பு வந்துவிட்டது.
வேதனை
பதிலளிநீக்குஎவ்வளவு பட்டாலும் நமக்கு சொரணை வராது நண்பரே
பதிலளிநீக்குமானமும் அறிவும் இருந்தால்தானே...சொரணை வரும்..
பதிலளிநீக்கு