வியாழன் 18 2019

அதிகாலை கனவு-42.

அப்பவே அப்படின்னா...இப்ப..எப்படி ...???





நேரத்தை பார்த்தபோது அதிகாலை மூன்றரையை காட்டியது.படுத்திருந்த படுக்கையை விட்டு எழுந்தார். பின்பு  விரித்திருந்த பாயை எடுத்து சுருட்டி பாதுகாப்பாக  வைத்துவிட்டு வெளியே வந்து அடக்கி வைத்திருந்த சிறுநீரை வெளியேற்றிவிட்டு மண்ணென்னை விளக்கை பற்ற வைத்து அந்த விளக்கை பிடித்த வண்ணம் வீட்டின்.முன்பு சிறிதாக இருந்த அடுப்படிக்குள் நுழைந்து விளக்கை ஓரமாக வைத்துவிட்டு.. முன்னமே வாங்கி வைத்திருந்த கிழங்கு மாவை ஒரு சட்டியிலே கொட்டி அதில தண்ணிரை ஊற்றி உருண்டை விழாத வண்ணம் நன்றாக கரைத்தார்

பின் தீப்பெட்டியை தேடி பிடித்து எடுத்து  அடிப்பின் ஓரமாக வைத்திருந்த எருவாட்டியை இரண்டாக உடைத்து தனியாக சீசாவில் இருந்த மண்ணென்ணையை இரண்டுக்குமாக சிறிது ஊற்றி .தீப்பெட்டி குச்சியை எடுத்து உரசி தீயை எருவாட்டின் மீது வைத்தார். தீ மள மள வென்று எறிந்தது. எருவாட்டின் ஒரு முனையை பிடித்து அடுப்பில்இரண்டையும் உள்ளே வைத்துவிட்டு.. கிழுங்கு மாவை கரைத்த சட்டியை தூக்கி அடுபபில் வைத்து தீ எரிந்து சட்டி சூடாக சூடாக கரண்டியால் கின்டிக் கொண்டே இருந்தார். இடையில் இரண்டொரு எருவாட்டியை உடைத்து அடுப்புக்குள் வைத்தார்.

சிறிது நேரத்துக்கு்பின்.. சட்டியை கிளறுவதை நிறுத்திவிட்டு சொம்பில் வைத்திருந்த தண்ணியில் கையை நணைத்து அந்தக்கையை வெந்து கொண்டிருந்த சட்டியில் ஒரு விரலை  மட்டும் முக்கி எடுத்தார்.. கையில் எதுவும் ஒட்டவில்லை என்பதை கண்டவுடன்  கூரையில் சொறுகி வைத்திருந்த கரித் துணியை அதாவது அடுப்பு துணியை எடுத்து சட்டியின் சூடு கைகைள தாக்காதவாறு துணியால் சட்டியின் மேல்பாத்தை துணியால் பிடித்து  இறக்கி அதை வீட்டு வாசலில் ஆற வைத்தார்...

வீட்டின் உள்ளே படுத்திருந்த அவருடைய அம்மா .சொல்வதை கேட்டு சரிம்மா என்றவாறு... ஒரு  கவிழத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஈயச்சட்டியை எடுத்து சிறிது தண்ணிரை ஊற்றி  சட்டியின் உள்ளே நன்றாக தேய்த்துக் கழுவி அடுப்படிக்குள் வந்து எரிந்து கொண்டிருந்த அடுப்பில் இன்னும் இரண்டொரு எருவாட்டியை வைத்து கழுவிய ஈயச்சட்டியில் பாதி வரை தண்ணீரை ஊற்றிய ஈயச்சட்டியை அடுப்பில் வைத்து அந்தச் சட்டிக்கு பொருத்தமான ஒரு ஈயத்தாம்பாளத்தை கொண்டு மூடி வைத்துவிட்டு... தன் அம்மாவிடம் 
”யம்மா....  உல வச்சட்டேன் ம்மா...என்றார். அவருடைய தாய் மீண்டும் எதோ சொல்ல  பதிலுக்கு அவர் “வச்சுட்டேன் அம்மா என்றபடி .. எறிந்தபடியே அடுப்புக்கு வெளியே வந்து விழுந்த எருவாட்டியை எடுத்து திரும்பவும் அடுப்புக்குள் திணித்து மீண்டும் ஒரு எருவாட்டியை இரண்டாக உடைத்து அடுப்புக்குள் திணித்துவிட்டு வாசலுக்கு வந்தார்.

வாசிலில் ஆற வைத்திருந்த சட்டியை தொட்டுப் பார்த்தபோது சட்டியில் சூடு கொஞ்சமாக குறைந்திருந்தது.  அதை ஒரு வாளியல் கொட்டினார்  கொட்டிய வாளியில் சிறிது தண்ணிரை ஊற்றி ஓரமாக வைத்துவிட்டு.. வாளியில் சிறிதுதாக தண்ணீரை ஊற்றி  கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுநிலை பக்குவத்தில் கரைத்தவிட்டு, கடைசியில்  தண்ணிர் ஊற்றி ஓரமாக வைத்திருந்த சட்டியில் ஓட்டியிருந்தவற்றை நன்றாக வழித்து எடுத்தவிட்டு நல்ல பக்குவத்தில் கரைத்துவிட்ட திருப்பியுடன்  சட்டியையும் கையையும்  நன்றாக கழுவி விட்டு மாலையில் மடித்து வைக்கப்பட்டிருந்த போஸ்டரை எடுத்து சைக்கிளின் பின் கேரியல் வைத்துவிட்டு பசை வாழியை சைக்கிளின் ஆன்பாரில் தொங்கவிட்டு  அம்மா என்றபடி வீட்டுக்குள் நுழைந்த போது.. அடுப்புகடியில் அமர்ந்திருந்த அவருடைய அம்மா உலையில் அரிசி போட்டுட்டேன். சோறும் உப்பு சாம்பரையும்  ஆக்கி வைத்துவிட்டு நான் வேலைக்கு போறேன். நீ வந்து சாப்பிட்டுக்கோ என்று சொன்னபோது.. சரிம்மா என்றுவிட்டு சைக்கிளில் மாட்டியிருந்த பசை வாளியை பிடித்தபடியே   சைக்கிளை உருட்டியபடி அவர் தெருவின் விளிம்பை வந்தடைந்தார்.

அவர் எரியாவிலிருந்து  ஓட்டத் தொடங்கிய  வேலை காலை ஏழு மணிவரை நகர மத்திய பேருந்து நிலையத்தில் முடிந்தது.  அவரால் முடித்து வைக்கப்படவில்லை இரண்டு காக்கிகளால் தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது  ஒன்றிரண்டு போஸ்டர்களே இருந்த நிலையில் முடிந்திருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்ற வந்த அனைத்து பஸ்களிலும் ஒட்டியதால் போஸ்டரின் வாசகம்  பட்டி தொட்டி எல்லாம்  தீயாக பரவியது...

போஸ்டரின் வாசகம் தீயாக பரவியதால்தான் அருகில் இருந்த காவல் நிலையத்திக்கு செய்தி “தீ”யாக பரவி நாலைந்து காக்கிகள் படை சூழ  சுற்றி வளைத்து ஒட்டிய போஸ்டரை சிலவற்றை கிழித்தும் பலவற்றை கிழிக்க முடியாமலும் தவித்தனர்.  பெரும்பாலும் பேருந்துகள் பட்டி தொட்டிகளுக்கு சென்று விட்டதால் காக்கிகளால் அவற்றை கிழிக்க வழியில்லாமல் போய்விட்டது  . 

நகரப்பேருந்தில் ஒற்றையாளக ஒட்டிக் கொண்டிருக்கும்போது உதவிக்கு ஒரு தோழர் வந்து சேர்ந்தார்.... இவர் பசை தடவி கொடுக்க அவர் பஸ்சில் ஒட்ட..அவர் ஒட்டி முடித்து வருவதற்குள் இவர் அருகில் நிற்கும் பேருந்தில் ஒட்ட ..இப்படி பம்பரமாக ஒட்டியதால் காக்கிகள் வருவதற்குள் ஒட்டி முடித்திருந்தார்.

வந்த காக்கிகள் இவரை சுற்றி நின்று கொண்டு இவர் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து காவல் நிலையத்துக்கு வருமாறு கையைப் பிடித்தனர்.. இவர் கையை பிடிக்காதீர்கள் பசை உங்ககள் ஒட்டிக் கொள்ளும். நான் தப்பித்து ஓடிப் போக மாட்டேன் உங்களோடு வருகிறேன். என்ற படி பசை வாளியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் செல்ல ஆரம்பித்தபோது.. இவருக்கு துணையாக ஒட்டிக் கொண்டிருந்தவரை இரண்டு பேர் கூட்டி வந்தனர்

அவரைக்  கண்டதும்  .“சார். அவருக்கும் போஸ்டர் ஒட்டுனதுக்கும் சம்பந்தமில்லை எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு..சும்மா வேடிக்கை பார்த்தவரை புடிச்சுட்டு வர்றிங்க நான்தான் வர்றேன்ல.. எத்தன தடவ என்ன பிடிச்சுட்டு போயிருக்கிங்க.. எப்பவாவது  ஓடியிருக்கேன்னா சொல்லுங்க... அவர விட்டுருங்க என்று சொன்னதும்.இவர் அருகில் இருந்த காக்கி  ஒருவர் சொன்னதும் அவரை விட்டுவிட்டனர். உடனே..இவர் அவரிடம் நண்பரே...! பிளாட்பாரத்தில் நடுவே நின்று கொண்டிருந்த சைக்கிளை  எடுத்துச் செல்லுங்கள்.. என்று சொல்ல... சுற்றி வளைத்து நின்றிருந்த  காக்கிகள் எஸ்ஐ சத்தமிட்டு வருவதை கண்டதும்  பதற்றமடைந்து அவரை பர பரவென்று இழுக்க .பசை வாளி , போஸ்டரை எடுக்க இவர் இழுக்க ஒரே தள்ளுமுள்ளாகி கொண்டிருந்தது...


இந்த தள்ளு முள்ளுவை  கண்டு .. நான் விழி பிதுங்கி விழித்து பார்க்க படுக்கையைில் விரித்த பாயை விட்டு தரையில் படுத்திருக்க கண்டேன்.. உடம்பெல்லாம் மண்ணாக இருக்கக் கண்டேன். என் அம்மா போட்டோவில் இருந்தபடி என்னை பாரத்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன்   பொழுதும் எப்பொழுதும் போல விடிந்திடக் கண்டேன்..

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்