சனி 20 2019

அதிகாலை கனவு-43.

அதிசியம்..ஆச்சரியம்..ஆனால்....???


மதுரை ஸ்மார்ட் சிட்டி க்கான பட முடிவு


இலேசாக மழை பெய்ய ஆரம்பித்தவுடன். ஒதுங்குவதற்கு தோதான இடத்தை தேடி ஆரம்பித்தேன்.. ஒரு இடத்தை கண்டுபிடித்து  இரு சக்கர வாகணத்தை நிறுத்தவதற்குள் பொறுக்கமாட்டாமல்  மழை சடசட சட வென பெய்ய ஆரம்பித்தது...

மழை பெய்த சிறிது நேரத்தில் ரோடெல்லாம் பனிக்கட்டி நிரம்பி வழிந்தது..... விழுந்த பனிக்கட்டியிருந்து  ஆவி வேறு பறந்தது. நான் மட்டுமே ஒதுங்கியிருந்த இடத்தில் கூட்டம் கூடியது... நான் சுவரோரம் நின்று இருந்ததாலும் என்னை சுற்றி கூட்டம் அரனாக நின்றதால் என் மழையின் சாரலோ் மழையில் தெறித்து விழும் பனி்கட்டிகளோ என் மேல் விழவில்லை..

சரியான மழை.. கொளுத்தின வெயிலுக்கு மேலே நாலு மடங்கு மழை கொட்டியது..வைகையில் ஓட வேண்டிய ஆறு....ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் பாதியளவுக்கு மழை தண்ணீர் ஓடியது...

பஸ் உள்ளிட்ட எல்லா வாகனங்கள் தனிறிக்கொண்டிருந்தன... மழையும் விடாது பெய்து கொண்டு இருந்தது. மின்சாரம் எல்லாம் நிறுத்தப்பட்டு மா மதுரையே ஒரு பக்கம் வெள்ளக்காடாகவும் இருட்டாகவும் இருந்தது..

சல்லிகட்டு போராட்டத்தின் வீடியோவில் காண்டதுபோல் எல்லோரும் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்..பலமணி நேரத்திற்கு பிறகு மழை நின்றது ஆனால் மழை நீர் ஆறாக ஓடுவது நிற்கவிலலை....

என்னை சுற்றி நின்றவர்கள் யாரும் இல்லை. நானும் எனது வாகனமும் மட்டுமே நின்றிருந்தோம்..  எனது வாகனத்தின் புகை போக்கினுள் மழை நீர் புகுந்து விட்டதால்   இயக்க  முடியவில்லை. ஆறாய் ஓடிக் கொண்டிருந்த நீரில் கைகால் விரைத்து போக...  குளிரால் ஆடும் தாடை வாய் ஆகியவற்றை பற்களால் கடித்த வண்ணம். உருட்டிக் கொண்டே  நகர மத்தியில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது.. வாகனங்களை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.. என்வாகனத்தை உருட்டி செல்வதற்குகூட வழி இல்லாமல் இருந்தது.

என் திசை நோக்கி வந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டே போனார்கள் சில பேர்களை விட்டுவிட்டு ஒரு சிலரிடம் என்னவென்று கேட்டேன்.



ஸ்மாட் சிட்டிக்காக  பல்அடுக்கு வாகன காப்பத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் பெய்த மழை நீரால் நிரம்பி மாடக்குளம் கண்மாய் பொல் காட்சி அளிப்பதாக சொன்னார்கள்...

அட... என்று நானும் வாய் பொளந்து ஆச்சரியபட்டு  சென்று   கண்மாய் ஆன முன்னால் நகரப் பேருந்தை அதிசியமாய் பார்த்து நின்றேன்.... கூட்ட நெரிசலில் இருந்து தப்பிப்பதற்க்காக பாலத்திலிருந்து இறங்கி  கண்மாய் அருகில் நின்றேன்.

போலீஸ் வந்து கூடிய கூட்டத்தை விரட்டியதில் முட்டிமோதி ஓடியவர்கள் தள்ளிவிட்டதில் கண்மாய் கடலில் விழுந்தேன்...

விழுந்ததுதான்..தாமதம்  படக்கென்று கண் விழித்து என் இருப்பை உணர்ந்து  இயல்பு நிலைக்கு வந்தேன்  மணியைப் பார்த்தபோது ஐந்தை தாண்டிக் கொண்டிருந்தது. எழுந்து கதவை திறந்து பார்த்தபோது என் வீட்டைச்சுற்றி மழைநீர் நின்றிருந்தது...

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்