இவன் பேரு முத்து இவன் மனைவி பேரு ராக்கு.. ரெண்டு பெயரும் சேர்ந்து முத்துராக்கு ஆனது.
சிறு வயதிலிருந்தே முத்துவுக்கு குறைபாடு, அதற்கு காரணம்...சிறுவயதில் ஏற்பட்ட கஞ்சா. மற்றும் தண்ணி போன்ற போதை பழக்கத்தால் “செல்ப்” எடுக்காத நிலை.
அவனது மனைவிக்கு கருப்பை கோளாறு அதனால் பிள்ளை பெறும் தகுதியை இழந்தவர். இவர்கள் இருவரையும் அவர்களின் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
கொஞ்ச நாள் பிரச்சினை இல்லாமல்தான் அவர்கள் வண்டியும் ஓடியது. என்றைக்கு தெரு நாட்டாமையின் வீட்டுக்கு குடிபோனார்களோ.. அன்றிலிருந்து நாட்டாமைக்கும் ராக்குக்கும் பத்திகிருச்சு... நாட்டாமையின் வைப்பாட்டியான “தீ கொளுத்தி” நோய்வாய்ப்பட்டு செத்துபோனதால் அடுத்தாக நாட்டாமை ராக்குவை கைவசப்படுத்தினான் .
தெருவுக்கே எல்லாம் தெரிந்தும் முத்துவுக்கு மட்டும் தெரியவில்லை... பந்தல் அமைப்பு வேலை செய்பவர்கள் யாராவது ராக்குவிடம் சும்மா பேசினாலும் முத்து சந்தேகப்பட்டு ராக்குவிடம் சண்டை போடுவான்.
ஒருநாள் ராக்கு கையாலதவனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று எண்ணினாள். அந்த நாளும் வந்தது. இரவு ராக்கு முத்துவை அனைத்து உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினாள். அவனால் முடியவில்லை. அவளிடமிருந்து தப்பித்துவர அவனால் முடியவில்லை. அந்த இரவில் கத்தி கூப்பாடு போட்டான். அவள் அவனை விடுவதாக இல்லை. ஏண்டா..ஒன்னாலதான் முடியலையே...இதுல.. சந்தேகப்பட்டு சண்டை வேறு போடுறியா.. இப்ப செய்யிடா... செய்யிடா... என்று அவனை பிதுக்கி எடுத்துவிட்டாள்.
அவனின் அலறல் சத்தம் கேட்டு தெருவே அவன் வீட்டு முன் கூடியது. அவள் பெயரைச் சொல்லி வெளியிருந்து சத்தம் கேட்டதும் அவளின் ஒரே உதையில் கதறியபடியே வெளியில் வந்து விழுந்தான்.
வௌியில் நின்ற பெண்கள் ஆண்களை கண்டதும்.. அய்யோ என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்தினான். அவனுக்கு ஆதரவாக சில பொம்பளைகள் பேசியபோது.. அவள் விவரத்தை அவர்களிடம் சொன்ன போதுதான் அவனின் கதறுக்கு காரணம் தெரிந்தது.
விசயத்தை கேள்விப்பட்டதும் சிறுகூட்டத்தில் பாதி கலைந்தது.. ஒன்றிரண்டு பெர் அவனுக்கு புத்தமதி சொன்னார்கள்
“உன்னாலதான் முடியலையே..வாய பொத்திகிட்டு இருக்க வேண்டியதானே” ஒழுங்கா அவ ஊத்துற சொத்த தின்னபிட்டு கிடய்யா...!! என்றார்கள்.. நாட்டாமை வருவதைக் கண்டதும் அந்த ஒன்றிரண்டு பேரும் கழண்டனர்.
இப்போ..அவன் ட்ரை சைக்கிள் ஓட்றான் ..அவள் ஓட்டலில் வேலை செய்கிறாள். நாட்டாமைக்கு வயதாகிவிட்டாலும்... தொடர்பில் இருப்பதாக செய்தி...
அட..சண்டாளா.... இப்படியுமா...? என்றுதான் கதை கேட்டவர்களுக்கு தோன்றியது.
.கதை சொன்னவரையும் அவன் சந்தேகப்பட்டு..அவளிடமும் கதை சொன்னவரிடமும் சண்டையிட்டானாம். ஆக.. அந்தக் கடுப்பில் மேற்படி கதையை அவிழ்த்துவிட்டார்.
ஊரெல்லாம் இப்படித்தான் இருக்கு...
பதிலளிநீக்குநாசமா போகட்டும்,
நீக்குஐயோ...
பதிலளிநீக்குநாடே அப்படியிருக்கையில் ஊரு இப்படித்தான் இருக்கும்.....
பதிலளிநீக்கு