ஒரு பக்கம், புயலும் வெள்ளமும்..இன்னொரு பக்கம் வறட்சியும் கடும் வெப்பமும் மனித இனம் கண்டிராத அளவுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி இந்த புவி கோள உலகத்தின் அழிவு தீவிரமாக போய் கொண்டு இருக்கிறது.
இது மனிதர்களால. ஏற்பட்டதல்ல... இதற்கு காரணம் ஜீ கூட்டமைப்பு நாடுகள் என்று சொல்லப்படுகின்ற G20 என்ற நாடுகள்தான் 80% பசுமை இல்லா வாயுக்களை வெளியிடுகின்றன அதிலும் குறிப்பாக ஓசோணை ஓட்டை போட்டு வருவது G8 கூட்டமைப்பில் உள்ள ஏகாதிபத்திய நாடுகள்தான்.
இப்படியான புவிகோளத்தின் நாசத்திற்கு முக்கிய வில்லன் யார் என்றால் அது அமெரிக்காதான். அதற்கு முக்கிய ஆவணம் இதுதான் அமெரிக்காவின் மேலே உள்ள ஓசோனில்தான் ஓட்டை விழுந்துள்ளது.
ஆனால் அமரிக்காவோ...அதை ஒத்துக் கொள்ளாமல் இந்தியாவில் இந்தியர்கள் வீட்டில் சமைக்க விறகை எரிப்பதால்தான் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது என்று நாக்கூசாமல் புளுகியது.
அமெரிக்க மற்றும் இந்திய அதிபர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பூமியின் அழிவை சந்திக்கும் மக்களை நினைத்து மீடியாக்களின் முன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். வெற்று அறிக்கையை வாசிக்கிறார்கள். மன்வைக்கிறார்கள்.
இதுதான் பூமியின் இறுதிக்காலம் என்று சூழுலியல் விஞ்ஞானஅறிஞர்கள் எச்சரித்துவிட்டனர். கரிமில வாயுவைவிட ஆபத்தானது மீத்தேன்.
பூமியின் கனிம வளங்களை கொள்ளையிட்டு சூறையாடும் மேல்நிலை வல்லரசுவின் கார்ப்பரேட் கும்பல் பூமிக்கு ஆபத்து வந்தால் வேறு கிரகத்திற்கு சென்று விடுவார்கள்.
அவர்கள் செல்வதற்க்குத்தான் வேறு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறார்கள். பெரும்பாண்மை மக்களுக்கு மரணம் நிச்சயம்.
கொடுமை...
பதிலளிநீக்குபேராசை தான் வேறென்ன ?
பதிலளிநீக்கு