செவ்வாய் 19 2023

பரிணாம வளர்ச்சி என்பது உண்மை......

 




19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள் தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.

பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ்_டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும் வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர்.

டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.

மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானி ஆக்கியது.

தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.

எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் ஏறி டார்வின் தென் அமெரிக்காவிற்கு பயணித்தார்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.

டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.

அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.

எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டன.

புதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.

பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.

எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.

தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.

மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.

மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.

ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.

அப்போதிலிருந்து இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தது.

டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலம் ஆனார்.

அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.

பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.

எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.

அதே சமயத்தில், பரிணாம வளர்ச்சி நம்பிக்கையோடு தொடர்புடையது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது.

இன்று, 160 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வினின் கோட்பாடு பரவலாக அறியப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது உண்மை என்பதை நாம் அறிவோம். கிரகம் மாறிக்கொண்டே இருக்கிறது, நாமும் அவ்வாறே பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...