பக்கங்கள்

Tuesday, March 03, 2015

உபதேசம் சொல்வது யாருக்கும் எளிது...

படம்-www.nimirnthunil.in

பத்தாம் வகுப்பு
பனிரெண்டாம் வகுப்பு
ஆண்டுத் தேர்வு
எழுதப் போகும்
மாணவர்களுக்கு

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லை
உச்சி மீது வானிடிந்து
வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
 அச்சம் என்பது இல்லையே
என்று தைரியம்
சொன்னார் முன்னால்
மாணவர்............

அந்த முன்னால்
மாணவரிடம் இந்நாள்
மாணவர் கேட்டார்

அச்சமில்லை அச்சமில்லை
என்று பாடியவரே
தமிழ்நாட்டிலிருந்து
புதுச்சேரிக்கு .அச்சப்பட்டு
ஓடிய..போது..........

பாட்டை படித்தவர்கள்
அச்சமில்லாமல் எழுத
முடியுமா....???


26 comments :

 1. அதை எழுதியவரைப் பற்றி அறியாதவர்கள் வேண்டுமானால் அச்சமில்லாமல் இருப்பார்கள் :)
  த ம 1

  ReplyDelete
 2. இதெல்லாம் பேசபடாது..புனிதம் போய் விடும்.
  சூத்திரனாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.

  ReplyDelete
 3. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு
  உத்தமன்போல் வேடமிட்டு உலவி வருவோர் பலர் இருக்க...

  இந்த பாடலையும், இந்த பாடலை பாடியவரையும்
  இப்படி இழிவு செய்து இருக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
  உண்மை மெய்ப் பட வேண்டும் தோழரே!
  சற்றே சிந்திப்பீர்! சிறப்பினை பெறுவீர்!
  நன்றி
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 4. கேள்வி நல்லாத்தான் இருக்கு, பதிலு அதான் கஷ்டம்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 5. மதியுரை கூறுவது (உபதேசம் சொல்வது)
  யாருக்கும் எளிது - அதனை
  காதில போட்டுக் கொள்வது தான் எளிதல்லவே!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. சிந்திக்க வைத்தது. தலையில் வானிடிந்து வீழ்தாலும் அச்சமில்லையென்று என்று உசுப்பிவிடுவது தப்பு

  ReplyDelete
 8. அப்படியும் அச்சமில்லாமல் இருக்க முடியாது அச்சம் உடலோடு ஒட்டிக் கொண்டது என்று சொன்னார்கள் --தலைவரே

  ReplyDelete
 9. பேசாமல் இருந்தாலும் ஓடி ஒளிந்தாலும் அச்சம் நீங்கி விடுமா...?ஃ

  ReplyDelete
 10. அந்த உண்மை மெய்படத்தான் உபதேசம் சொல்வது யாருக்கும் எளிது என்று பதிவிட்டு இருக்கிறேன். நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நற்சிறப்பினை
   நல்ல பதிலாக தந்தமைக்கு
   வல்லவனை வாழ்த்துகிறேன்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. நற்சிறப்பினை
   நல்ல பதிலாக தந்தமைக்கு
   வல்லவனை வாழ்த்துகிறேன்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  3. வல்லவன் என்று சொல்ல தகுதியில்லா அச்சத்தால் நல்லவன் நண்பரே....

   Delete
 11. சில நேரங்களில் கேள்விகள்/பதில்களில் - உண்மை கசக்கத்தான் செய்யும் நண்பரே.....

  ReplyDelete
 12. உண்தைான் நண்பரே..“காதில போட்டுக் கொள்வது தான் எளிதல்லவே” அதுவும் அச்சத்தின் காரணமாகவும் இருக்கலாமல்லவா???

  ReplyDelete
 13. தாங்கள் சொல்வதுபடி “அச்சமில்லையென்று என்று உசுப்பிவிடுவது தப்பு” -தான் நண்பரே....

  ReplyDelete
 14. “அதானே” என்று முத்தாப்பு வைத்தற்கு நன்றி! நண்பரே......

  ReplyDelete
 15. காசா பணமா வாரி வழங்க, இது தானே,,,,,,,,,,,,,,,, என்ன ஆயிடப் போகுது. சரியா?

  ReplyDelete
 16. "அய்யோ, பாவம், பாரதியை விட்டு விடுங்கள்!
  கஞ்சா போதையில் ஏதோ உளறி (எழுதி) விட்டார்"

  ReplyDelete
 17. ஆமாங்க...... உபதேசம் செய்வதற்கு காசா..பணமா... வாரி வழங்க...

  ReplyDelete
 18. அட...அது வேற உண்டா.....பாடியவர்க்கு....“தாங்களே அச்சம் கொண்டுதானே பெயரில்லாமல்.”.கருத்துரையிடுகிறீர்கள்...

  ReplyDelete
 19. ஹீ ஹீ ! இதனால்தான் நான் யாருக்கும் உபதேசம் செய்வதே இல்லை .

  தம+

  ReplyDelete
  Replies
  1. தப்பித்து கொண்டீர்கள்...

   Delete
 20. தமிழ்மணத்த காணோம் ??

  ReplyDelete
 21. தமிழ்மணம் தேநீர் அருந்த போயிருந்த நேரத்தில் தேடியிருந்தீர்ப்பீர்கள்............

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com