பக்கங்கள்

Wednesday, March 04, 2015

அவனுக்கு மட்டும் உரிமை ஏன்?

படம்-tamilnanbargal.com

இறைவன் கொடுத்த
உயிரை பறிக்க
யாருக்கும் உரிமை
இல்லை என்றால்.......................

அனுதினமும் சாலை
விபத்தில் ..  போலீஸ்
லாக்ப்பில்  சாதி மாறி
காதலித்தால் சாதி
வெறியில் பல
உயிர்கள் பறிக்கப்
படுகிறதே அதற்கு
மட்டும் தனி உரிமை ஏன்?

வயது முதிர்ந்த
உயிர்களை கொடுத்த
இறைவனே பறித்துக்
கொல்கிறானே.....

அவனுக்கு மட்டும்
உரிமை ஏன்?

18 comments :

 1. கொடுத்தவனே எடுத்துக்கொண்றான்டி
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. கொடுத்தவனுக்கு எடுத்துக் கொல்ல உரிமையுண்டா நண்பரே....

   Delete
 2. இதிலே வேடிக்கையென்னன்னா சாதி மாறி காதலித்தால் சாதி வெறியில் பல உயிர்கள் பறித்தெடுப்பவர்கள் தான் இறைவன் கொடுத்த உயிர் என்று இறைவனை போற்றுபவர்களாக இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இறைவனுடைய முகவர்கள் உயிர்களை பறித்தெடுக்க அங்கீகாரம் பெற்று இருப்பார்களே் நண்பரே...

   Delete
 3. வர வர எல்லா பதிவர்களும் ஏன் ஏனென்று கேட்கத் தொடங்கி விட்டீர்களே ,யார்தான் பதில் சொல்வது :)
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. கேள்வி கேட்டதால்தானே...... பதில் சொல்பவர்கள் யார் சொல்லாதவர்கள் யார் என்று அம்பலத்தக்கு வரும் நண்பரே..

   Delete
  2. பகவான்ஜி நம்மளை தாக்குறது மா3 இருக்கே...

   Delete
  3. அப்படியா.....எதுக்கும் அது உண்மையான்னு ஒரு தடவையாவது பட்ஜி ஜோசியம் பார்த்துவிட்டால் நம் சந்தேகம் தீர்ந்துவிடும் என்று நிணைக்கிறேன் நண்பரே...

   Delete
 4. Replies
  1. கேள்வியாவது கேட்டு வைப்போம் நண்பரே..........

   Delete
 5. வேதனையின் வெளிப்பாட்டை வரிகள் உணர்த்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வேதனையின்போதாவது கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் என்ற ஏக்கம்தான் ஐயா

   Delete
 6. கேள்வி பிறந்தால் உடனே பதில் பிறக்கும். தங்கள் வேதனை மட்டும் அல்ல, எங்களுக்கும் தான். எல்லாம் கர்மவினைப்பயன் என்று சொல்வதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?. அப்ப சரி, எல்லாம் அவன் செயல்,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அவன் செயல்,,,,,,,,,சரி.,,,,,அவனுக்கு மட்டும் உரிமை ஏன்?

   Delete
 7. த ம வாக்கு +5
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. நல்லது ..வாக்களித்தவர்களுக்கு வாக்களிப்பது தமிழ்மண மரபு..

   Delete
 8. தோழரே!
  இங்கும் பறவையை வைத்து கவிதை மழையா?
  பாராட்டு மழையில் நனைகின்றீர்களே!
  குடை கொண்டு வரவா?
  அதுபோகட்டும்
  நீதி மன்றத்தில் கேட்கும் கேள்வி இது?
  உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் தந்தது? என்று!
  மதிப்பிற்குரிய கணம் கோர்ட்டார் அவர்களே!
  இறைவனை விட்டு விடுங்கள்!
  இது அவரது துறை அல்ல!
  சம்மந்தப்பட்ட இலாக்கா மந்திரி எமதர்மராஜனை
  கோர்ட்டில் ஆஜர் படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன்!
  யுவர் ஆணர்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. கவிதை மழையில் உடைகள் நணைந்து ஜல தோசம் பீடிக்கும் என்றால் தற்காப்புக்காக .தங்களின் குடை தேவைப்படலாம் திரு. நட்புடன் புதுவை வேலு அவர்களே!!

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com