#BESTSONGSTAMIL #SUPERHITVIDEOSONGS
சாதி ஆணவ வெறியாட்டங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன. ஆதிக்க சாதிச் சங்கங்கள், கட்சிகள் தங்களின் ஓட்டரசியலில் வாக்குப் பொறுக்குவதற்காக சாதிய வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன.
இதன் ஒரு வெளிப்பாடுதான் பாமக சாதி வெறியர்களும் இந்து முன்னணி பொறுக்கிகளும் இணைந்து நடத்திய சமீபத்திய பொன்பரப்பி வன்முறை !
1997-ம் ஆண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகம் கலைக்குழுவின் சார்பில் ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா என்ற பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டது. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கச் சாதித் திமிரை நார்நாராய் கிழித்தெறிகின்றன.
நீங்களும் பாருங்கள் ! பகிருங்கள் !
பாடல் வரிகள் :
வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)
வெட்டியாரப் பயலுன்னு
பட்டம் கெடச்சது எங்களுக்கு
கொட்டடிக்க மாடுதூக்க
கொடுப்பின வேறாருக்கு….?
செத்தா உன்ன வேக வைக்கும்
வெட்டியான் நான் உனக்கு… (வெட்டியான் நான் உனக்கு)
சேத்து
சாதியையும் வேக வைப்போம் – அப்ப
என்ன பேரு எங்களுக்கு …
வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே…
வெந்துமடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)
குப்ப மலத்தை வாரி….
கொட்டும் வேலை எங்களுக்கு
கூடை பிஞ்சு மொகத்தில் வழிய
சுமந்திடறோம் உங்களுக்கு
ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ…
தோட்டிப் பட்டம் எங்களுக்கு (தோட்டிப் பட்டம் எங்களுக்கு)
- மல
சாக்கடையில் நீ எறங்கு – உன்
சாதி என்ன சொல் எனக்கு…
வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)
அழுகின பொணத்தக் கூட
மடியில் வச்சி வழிக்கிறோம்…
ஆனாலும் கூலி இல்ல…
எரந்து கஞ்சி குடிக்கிறோம்…
உன்ன ஊர் மதிக்க செஞ்சதுக்கோ….
அம்பட்டன்னு பேர் எடுத்தோம் (அம்பட்டன்னு பேர் எடுத்தோம்)
சாதி
ஆணவத்த வெட்டிடுறோம் – பேரு
என்ன வைப்ப… பாத்திடுறோம்…
வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே … (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)
உன்னோட அழுக்குத் துணி
வெள்ளாவியிலே வேகுது …
எங்களோட முதுகுத்தோலு
வெய்யிலிலே தீயுது….
உன் துணிய தொவைக்கும்போது
வண்ணாரப் பய நான் உனக்கு
அடிச்சி
உன் திமிர வெளுப்போம்
அப்போ என்ன பேரு எங்களுக்கு ? …
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
நல்ல வரிகள்
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு