வெள்ளி 17 2015

அய்யா..ஞானப்பிரகாசம் அவர்களே!!!

படம்-www.tutyonline.net

சட்டம் அனைவருக்கும்
சமமுன்னு தாங்கள் 
சொன்னதாக இந்தக்
குடிமகனிடம் அந்தக்
குடிமகன் ஔறிக்
கொட்டினான் அவனிடம்
சொன்னதை  தங்களிடம்
கேட்கிறேன்..அய்யா
 ஞானப்பிரகாசம் அவர்க்ளே!

இந்தக் குடிமகன்
ஏதோ ஔருகிறான் 
என்று எண்ண வேண்டாம்
குடிகாரன் உளறினாலும்
உண்மையைத்தான் சொல்வான்
 இது வாகை சந்திரசேகர்
உளறிய சினிமா
வசனமல்ல அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!

சட்டம் எல்லோருக்கும்
சமம் என்று
சொன்ன தாங்கள்
தலைக்கவசம் அணிந்து
டூவீலரில் செல்லாமல்
ஹாய்யாக ஃபோர் 
வீலரில் செல்கிறிர்களே!
உங்கள் நரம்பில்லா
நாக்கு  அங்கும்
மிங்கும இப்படி
உளறி கொட்டுவதேன்
ஏன்? அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!

23 கருத்துகள்:

  1. சட்டம் எல்லார்க்கும் சமம் என்கிற கதையை நம்ப அவர்கள் என்ன ஒன்றும் அறியாத பாமரர்களா ?

    தொடருங்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் அனைவருக்கும் சமமுன்னு சொல்பவர்களே சட்டத்தை மதிக்காத போது பாமரர்களை சொல்லி பயனில்லை..அய்யா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. இந்த நாடும் இந்த நாட்டு சட்டமும் என்னமோ..போங்க...

      நீக்கு
  3. வலிப்போக்கரே,,,,,,
    குடி மகன்கள்,,,,,,,, பிரகாசமாய் இருப்பார்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஃபோர் வீலரில் சென்றால் கட்டாயம் பெல்ட் அணிய வேண்டும் உத்தரவு போடச் சொல்லலாமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி,
      அவசியம் கடைப்பிடித்தாக வேண்டிய பாதுகாப்புகளில் என்ன கேள்வி.
      ஆனா இரண்டு வீலுக்கா, ஹெல்மெட்டுக்கெதிராக போராடும் வலிபோக்கர் ஃபோர் வீலுக்காக, சீட் பெல்ட்டுக்கெதிராக இரண்டு மடங்கு வேகத்துடன் போராடுவார்:)

      நீக்கு
    2. ஃபோர் வீலரில் செல்பவர்கள் பெல்ட் மாட்டவில்லை என்றால்.. வண்டியை பறிமுதல் செய்வார்களா??? அல்லது வண்டியை போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் செல்வார்களா...??? திரு வேகநரியாரே... அநியாயத்துக்கு எதிராக இந்த வலிப்போக்கன் எப்போதும் போராடுவார். போராடிக் கொண்டே இருப்பார்...

      நீக்கு
    3. அநியாயத்துக்கு எதிராக இந்த வலிப்போக்கன் எப்போதும் போராடுவார் என்பதை யார் மறுத்தார்கள்
      தலைகவசம் என்கின்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை இவர் எதிர்கலாமோ?

      நீக்கு
    4. முதலில் சாராயக் கடையை அடைத்தாலே..... வாகன ஒட்டிகளுக்கு பாதுகாப்பு வந்துவிடும் என்பதை எனது வேகநரியாருக்கு எப்படி புரிய வைப்பேன்...???

      நீக்கு

  5. தலைக்கவசம் அணிந்து
    டூவீலரில் செல்ல வேண்டுமென்மதை
    இன்னும்
    எத்தனை ஆள்கள் அறியாமல் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைக்கவசம் அணிந்து தான் இரண்டு வீலரில் செல்ல வேண்டுமென்று தெரிந்து வைத்திருக்கும் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி தலைக்கவசத்திற்கெதிராக வலிபோக்கர் போராட போகிறார் போல் தெரிகிறது.

      நீக்கு
    2. வேகநரியார் அவர்கள்,தமிழகத்திற்கு வந்து ஒரு முறையோ..இரு முறையோ.. நகரத்தெரு சாலைகளில் டூவீலரில் ஓட்டிக் சென்றால். அவரும் ஹெல்மெட்டுக்கு எதிராகத்தான் குரல் கொடுப்பார்.

      நீக்கு
    3. //வேகநரியார் அவர்கள்,தமிழகத்திற்கு வந்து ஒரு முறையோ..இரு முறையோ.. நகரத்தெரு சாலைகளில் டூவீலரில் ஓட்டிக் சென்றால்//

      நகரத்தெரு சாலைகளில் டூவீலரில் வெயிலுக்கு காற்றோட்டமாக ஜாலியா சென்று வர நான் மிகவும் +மிகவும் விரும்பிய போதும்,என்னை கூட்டி செல்லவிரும்பிய அன்புள்ளங்கள் கொண்டவர்களிடம் அவர்கள் அணிவதற்கு கூட தலைகவசம் கிடையாது. அதனால் எனக்கு தருவதற்கும் அவர்களிடம் தலைகவசம் கிடையாது. தலைகவசம் எதற்கு அணிய வேண்டும் என்று கேட்கும் நிலையில் தான் அவர்கள் இருந்தார்கள்.
      தலைகவசமில்லாம என்னை டூவீலரில் வெளியே அனுப்ப எனது குடும்பத்தார் ஒருபோதும் தயார் இல்ல. தலைகவசம் இல்லாம டூவீலரில் செல்ல நானும் தாயாரில்ல .
      நான் வசிக்கும் நாட்டில் சைக்கிலில் செல்வதற்கு தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு எதுவுமே கிடையாது. ஆனால் ஒழுங்காக இல்ல ஏதாவது ஒரு சனி அல்லது ஞாயிறு மட்டுமே சைக்கில் ஓட்டும் நான் தலைகவசம் வைத்திருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும் விடும்முறைநாட்களில் எங்கே சென்று சைக்கிள் ஓட்டுவேன் என்று நினைக்கிறீர்கள் வலிபோக்கரே, நீங்கள் வெறுக்கும் குண்டும் குழியுமான பகுதிகளை தேடி போய் தான். ஆனால் அங்கே தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு கிடையாது ஆனால் எல்லோருமே,தலைகவசம் அணிந்து தான் எல்லாருமே சைக்கிள் ஓட்டுவோம்.

      நீக்கு
    4. திரு. வேகநரியாரே..தாங்கள் விடுமுறை நாட்களில் விரும்பி சென்று குண்டு..குழிகளில் சைக்கிள் ஓட்டுகிறீர்கள். ஆனால் இங்கே அப்படியில்லையே.. தினசரி வாழக்கைக்கான பயணத்தில் குண்டும் குழியுதானே......கூகுள் மேப்பில் கூட குண்டம் குழியும் தெரியமா என்பது தெரியவில்லையெ !!!

      நீக்கு
  6. இப்பொழுதெல்லாம் சட்டப்படி அல்ல நீதிபதிகளின் இஷ்டப்படிதான் தீர்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே இருக்கும் சட்டப்படிதான் தீர்ப்பு என்றால், அபராதத் தொகை மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும். எதற்கு வாகன பறிமுதல்? போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் திரும்ப கிடைக்கும் வண்டியின் நிலைமை (அதிலும் புது வண்டி என்றால்) எவ்விதம் இருக்கும் என்பதைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான்பொது மக்களுக்கான சட்டம் அனைவருக்கும் சமம் என்பதின் லட்சனம் அய்யா...

      நீக்கு
  7. அட போங்கப்பா,,,இப்படி எல்லாம் நாம நாயா குரைச்சாலும்...அதெல்லாம் எங்க அவங்க காதுல விழப்போகுது....சாலை விதிகள் என்பதே நம்மூர்ல இல்ல இதுல ஹெல்மெட் வேற....ஹஹஹ் என்ன ஒரு நியாயம் பாருங்க....ஹெல்மெட் போட்ட எப்படி வேணா ஓட்டலாமோ??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி வேணா வண்டி ஓட்டலாம்முனு தானே..அய்யா..ஹெல்மெட்டே போடச் சொல்றாங்க......

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...