பக்கங்கள்

Wednesday, June 08, 2011

மது விற்கும் அரசை நாம் ஒன்று கூடி வல்லரசாக்குவோம்மது நாட்டுக்கும் கேடு
வீட்டுக்கும் கேடு


மதுக்கடையில் சர்க்கார்
எழுதி வைத்திருக்கும் வாசகம்


மது குடித்தால் நாட்டுக்கு
குடிக்காவிட்டால் வீட்டுக்கு


வீடு பெரிதா? நாடு பெரிதா?
நாடே பெரிது. வீடு அடுத்து.


மது குடித்து நாட்டை  
முன்னேற்றும் மது வாணர்களே!


மது பானத்தில் துருபிடித்த
இரும்பு நட்டு கிடந்ததை


குற்றமென புகராதீர்!


அது நாட்டு முன்னேற்றத்திற்கு
தடைக்கல்லாக அமையும்.


இருந்தாலும் நம் நாட்டுப் பற்றால்
தடைக்கற்களை புறந்தள்ளுவோம்.


மது விற்று தாலி அறுக்கும் அரசை
மது விற்று தாலிக்கு தங்கம் தரும் அரசை


நாம் ஒன்று கூடி வல்லரசாக்குவோம்.! Top of Form

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com