சனி 11 2011

ஏ....ராஜாவே.....கோண மாணலா தொங்குதே...அது என்னாது?

ஒரு ஊர்ல ஒருத்தி இருந்தா, அவளுக்கு தினமும் புளியங்கா
வித்தால்தான் கஞ்சி. புளியங்கா விக்கலைன்னா அன்றைக்கு
கஞ்சி இல்லே. இப்படி கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டுயிருந்தது.

இப்படி இருக்கையிலே, அந்த நாட்டு ராஜா புளியங்கா காரியை
கவனிச்சுகிட்டு வந்து இருக்காரு. ஒரு நாளு.ராஜா

அய்யோ,பாவம், இப்படி புளியங்கா வித்து கஞ்சி குடிகறாளே
என்று எண்ணி இரக்கப்பட்டாரு. அந்த இரக்கத்தினால் அவளை
ராணியாக்கிட்டாரு.

இப்படியிருக்கையிலே,ஒரு நாளு,ராஜாவும் இந்த புளியங்கா
ராணியும் குதிரை கட்டிய சாரட் வண்டியில் வீதி வழியாக உலா
வந்தார்கள். அவர்கள் வரும்வழியில் நிறைய புளியமரங்களா
இருந்தன.

சாரட் வண்டியில வந்த இந்த புளியங்கா ராணியும் வைத்த கண்
வாங்காமல் பார்த்து கிட்டே வந்தவஙங்க.
ராஜாவ,ஆசையா தொட்டு, ஏங்க....ராஜாவே! அந்த மரத்தில
கோண மாணலா தொங்குதே.. அது என்னாதுன்னு கேட்டுருக்காங்க

ராஜாவும் கோண..மாணலா இருக்கிறத பாத்துட்டு. அடியே!
பேசாம வாடின்னுன்னாரு?

ராணியும் பேசாம, இருக்காம, திரும்பவும். ஏங்க ...ராஜாவே.....
கோண மாணலா இருக்கிறது என்னாதுன்னு-கொஞ்சலா
கேட்டு இருக்காங்கா.

ராஜாவுக்கு, கோபம் வந்துருச்சு,ஏலா, நீ வித்த புளியங்கா
தெரியாதாடி, திட்டி அரண்மனையை விட்டு விரட்டிட்டாரு.

ஏங்க....ராஜாவே! இந்த புளியங்கா ராணி யாருன்னு கொஞ்சம்
சொல்லிட்டு போறீங்களா?

6 கருத்துகள்:

  1. சின்ன குளுங்க,நண்டு கொழுத்தா சிரைக்குள்(பொந்துக்குள்) இருக்காதுங்க!

    பதிலளிநீக்கு
  2. இல்லங்க பாஸ்,திரும்பவும் நிதானமா படிச்சு,யோசிச்சு பாருங்க பாஸ்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...