பக்கங்கள்

Tuesday, August 23, 2011

துப்பாக்கி கொடுத்தா,சுட்டவனை சுட்டுபிடுவேயில்ல!!!!

தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள  இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில்
பலியாவதைக் தடுக்க வக்கற்ற அரசுகளுக்கு பதிலாக மீனவர்கள்
தங்களை துப்பாக்கி சூட்டில் பர்துகாத்துக் கொள்ள மீனவர்களுக்கு
துப்பாக்கி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மனித உரிமை
பாதுகாப்பு மையத்தின் இணைச்செயலாளரான வழக்கறிஞர் வாஞ்சி
நாதன்..மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தார்.

சிங்கள இராணுவத்தால் சுடப்பட்டவர்கள் செத்து மண்ணோடு
மண்ணாக ஆனபிறகு இந்தீய வெளியுறவுத்துறை இணை
இயக்குநர் மற்றும்,இனைச்செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல்
செய்துள்ளனர். அதில்
மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சி
னைக்கு வழி வகுக்குமாம்.இந்திய மீனவர்களின் வாழ்வுதாரப்
பிரச்சனையை  இலங்கைமனித நேயத்துடன் அனுக ஒப்புக்
கொள்ளபட்டதாம்

அடடா, இது நரியை பரியாக்கிய கதையாக அல்லவா இருக்கிறது.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது.அது மாதிரி, இலங்கை தமிழ்
மக்களைவேரொடு அழித்தும் தமிழக மீனவர்களை சுட்டு பொசுக்கிய
கொலை வெறி யர்களுக்கு மனித நேயம்  என்ற ஒன்று இருக்குதாம்
இதை நம்பச்சொல்லுது இந்திய வெளியுறவுத்துறை.

அடுத்து,சொலிட்டர் ஜெனரால் ஆஜராகப் போவதைக் காரணம்
காட்டி  வழக்கு 25தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இனி,என்ன? வாய்தா! வாய்தா! வாய்தா! அப்புறம்!!

அப்புறமென்ன? துப்பாக்கி கொடுத்தா பதிலுக்கு சுட்டவனை சுட்டு
பிடுவேயில்ல,இப்படி இன்னும் சொலலக்கிட்டே போகலாம்.

ஜெனரல் என்ன சொல்ல வர்ரார்ன்னு எதிர் பார்ப்போம்.

சத்தம் போடாதிங்க!   பொருங்கப்பா!!?

2 comments :

  1. neengkalee saththam podaathingkappaannu sonnathuk kappuram vera enna irukku... vedikkai thaan.. vaalththukkal

    ReplyDelete
  2. சார்.கோர்டல. அமினா அடிக்கடி சத்தம் போடாதிங்கன்னு சொல்வாருல அந்த அர்த்தம் சார்.சார்.கோர்டல. அமினா அடிக்கடி சத்தம் போடாதிங்கன்னு சொல்வாருல அந்த அர்த்தம் சார்.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com