பக்கங்கள்

Tuesday, August 30, 2011

சட்டம் தன் கடமையை செய்யும்???

ஒரு நாயை கொல்வதென்றால்
தீர விசாரித்து கொல்வார்களாம்
கொலைகாரர்கள்.

குற்றமற்ற மனிதர்களை
அதுவும் தமிழர்களை
தீர விசாரிக்காமல் தண்டனையும்
கொடுத்து,அது முடிந்தும்
கொல்வார்களாம்-கொலைகாரர்களின்
கொள்ளைர்களின் வாரிசுகள்

சூரியன் அஸ்தமிக்காத கொள்ளையனிடம்
கூட்டிக கொடுக்காமல் காட்டிக் கொடுக்காமல்
ரத்தம் சிந்தாமல் பெற்றார்களாம்
ஜனநாயத்தை

அந்த ஜனநாயக நாட்டில் மூவர்க்கு
ஜனநாயகப்படி துாக்காம்
சுட்டவனை சுட்டு-சுட்டவனோடு
மாணடவர்கள் உயிருடன் இல்லாததால்
சுடாமல் இருந்தவர்களை,வலை வீசி
பிடித்து இருபது ஆண்டுகள சிறையில்
வதைத்தும், போதாதென்று மூவரையும்
துாக்கிட்டு கொல்வார்களாம்.

ரத்தம் சிந்தா ஜனநாயக நாட்டில்
ஊத்த வாய்(ர்)கள் சொல்கிறார்கள்
சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்

ஆண்டைகளுக்காக
கருப்பு சட்டங்கள் மூலம்
கொலை வெறியர்களுக்காக!
கொள்ளைக்காரர்களுக்காக!!
கக்கியதை நக்கி மாண்டவனுக்காக
கொல்லாமல் கொல்லுவதற்து
ஆறப்போட்டு கொல்லுவதற்கு
மானிட நீதியையும்,உயிர் வாழும்
உரிமையையும் ஒழிப்பதற்கு
சட்டம் தன் கடமையைச் செய்யும்!!!

2 comments :

  1. பெரும்பான்மை மக்கள் விரும்பாத அரசு ஆட்சி புரியும் கொடுமை தான் இந்திய ஜனநாயகம்...
    அதில் நீதியாவது,
    வெங்காயமாவது..

    ReplyDelete
  2. தங்கள் கூற்று உண்மைதான்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com