பக்கங்கள்

Tuesday, December 20, 2011

முன்னால் முதல்வர் இன்னால் முதல்வராகிறார்!!!கர்....நாடக மாநிலத்தின் முன்னால் முதல்வர் அரசு நிலங்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கிய முறைகேட்டில், நிலமோசடி வழக்கில் லோக் அயுக்தா போலிசால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் ஓய்வு எடுத்து ஜாமினில் வெளிவந்தார்.

வெளியே வந்ததும் சில நாளில் தனக்கு 72 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவியை தனக்கே வழங்கும்படி உத்தமசிகாமணிகளின் தலைமை பா.ஜா தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி யுள்ளார்.

இதற்கு ஆதரவாக இரு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். வெளியுறைவு அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா மீதும் லோக் அயுக்தாவில் வழக்கு பதிவாகியுள்ளது. இருந்தும் அவர் அமைச்சராக இருக்கிறார்.

தமிழகத்து ஆத்தா ஜெயலலிதாவின் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாக வழக்கு நடக்கிறது. அவரும் பதிவியில் இருந்துகொண்டு வலம் வருகிறார்.இவர்களே! எந்தவித குற்றணர்வு இல்லாமல் பதவியில் இருக்கும்போது. இவர்களையே முன்னுதரமாகக் கொண்டு என்னையும் முதல்வராக்க வேண்டும் என்று யுத்தத்தை தொடுத்துள்ளார்.

முன்னால் முதல்வர் எடியுரப்பா,இன்னால் முதல்வராவதற்கு அவர் காட்டும் ரோல் மாடல்களேஇதற்குசாட்சி.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com