செவ்வாய் 27 2011

எட்டாவது அதிசியம் என்னான்னு தெரியுமா?





என் நண்பர் பேச்சின் ஊடே உலக அதிசியம்
ஏழு என்னான்னு தெரியுமா? என்று கேட்டார்.
நான் முழித்துக்கொண்டு இருக்கையில்
இன்னொருத்தர் இடையில் புகுந்து,  

ஓ......ஓ...... தெரியுமே, தாஜ்மகால்,
சீனப்பெருஞ்சுவர்,சாய்ந்தகோபுரம்,
பிரான்ஸ் டவர்,எகிப்து பிரமிடு............
இப்படி வரிசையாகஓப்புவித்தார்.

நண்பர்,அவரிடம் எப்படித் தெரியும்.
எங்க பார்த்திங்க என்று கேட்டார்.
அவரும் கே.டீவியிலதான் பார்த்தாகவும்.
 டைமன்முத்துவின் “அதிசியமே அசந்து
 போகும் அதிசியமே” என்ற பாடலில்
“.வந்ததே மூத்தரம்” என்று ஓலமிட்ட
 ரகுமான் இசையில் ஏழு ஒலக
அதிசியத்தை பார்த்த அதிசியத்தை குறிப்பிட்டார்.

என்னைப் பார்த்த நண்பர்., என்ன.
 பாத்தீங்களா? என்றார்.அந்த ஏழு அதிசியத்தை
பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
இனி கே.டீவியில் போடுவார்கள்ள
அப்போது பாத்துக்கலாம். என்றேன்

ஏழு அதிசியத்தை சொன்ன நண்பரோ,
எனக்கு கேட்காதளவுக்கு நக்கல் அடித்து
 ஏளனமாக பார்த்தார்.இருவரையும்
 பார்த்து ஏழாவது அதிசியம் என்னனென்பது
தெரியவில்லை என்பதை ஒத்தக்கொள்
கிறேன் என்றேன்.

ஏழு அதிசியங்கள் தெரிந்திருக்கிற
 உங்களுக்கு. “எட்டாவது அதிசியம்
” என்னான்னு தெரிஞ்சு இருக்கனுமே,
அது என்னான்னு சொல்லுங்க என்றேன்.

நண்பர்கள் இருவரும். வேறு எதை
எதையோ சொன்னார்கள். அவர்களுக்கு
எட்டாவது அதிசியம் என்னாதுன்னு
தெரியவில்லை.அந்த அதிசியம்
உங்களுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. நானே சொல்லவா? என்றேன்.

நண்பர், எட்டாவது அதிசியம் ஒன்னு
 இருப்பதாக தெரியவில்லையே என்றார்.

இருக்கு என்றேன். உலகத்திலுள்ள எல்லா
 ஊடகங்களும் சொல்லியிருக்கிறது
எழுதியிருக்கிறது. அந்த அதிசியத்தை
பார்ப்பதற்காக தவமும் இருக்கிறது என்றேன்.


அப்படியென்ன, அதிசியமுன்னு,
எங்களுக்கு தெரியலையேன்று,யார்
யாருக்கோ செல்- அடித்துக்கேட்டார்கள்.
யாரும் சரியாக எட்டாவது அதிசியத்தை
சொல்லவில்லை..

படிக்கும் நீங்களாவது அந்த எட்டாவது
 அதிசியம் என்னான்னு சொல்லுங்க
பார்க்கலாம்.

2 கருத்துகள்:

இந்த படம் ஒன்றே போதும்

  நண்பர் கில்லரின் கோடாரி எதற்கு என்பதற்கும். மரங்களின் நம்பிக்கைக்கும் இந்த ஒரு படமே சான்று