பக்கங்கள்

Wednesday, December 28, 2011

மொட்டை போட்டு நாமம் போடுவது எப்படி?
 நாமம் , காந்தி கணக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமால் இருக்காது. அதிலும் மொட்டையும் போட்டு நாமம் போடுவது எப்படி என்று சேது- பாலாவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னனியாக வைத்து சைக்கோ பாலா புதிய படத்தை இயக்கப்போகிறாராம்.இந்தப் படத்திற்க்காக 200 துனைநடிகைகளை தேர்ந்தெடுத்து அனைவரையும் மொட்டையடிக்கச் சொல்லி படம் முடியும்வரை மொட்டைத்தலையுடன்தான் இருக்க வேண்டும் என்றாராம்
(தேயிலை தோட்ட முதலாளிகள் தொழிளாலர்களுக்கு நாமம் போட்ட மாதிரி)

எற்கனவே. பாலா.பல நடிகர்களுக்கு மொட்டைபோடாமல் நாமம் போட்ட கதையை தெரிந்து கொண்ட 200 துனை நடிகைகள்,ஆகா.......நமக்கு மொட்டையும் போட்டு நாமம் இல்ல போடப்போறாரு என்று சுதாரித்துக் கொண்ட துனை நடிகைகள்.

மூன்று படங்களுக்கான. சம்பளத்தை மொத்தமாக தந்து விடுங்கள். படம் முடியும்வரை நாங்கள் மொட்டையுடன்  இருக்கிறோம் என்று துனை நடிகைகள் சங்கத்தின் மூலமாக கேட்டுள்ளனர்.

பாலாவும் வழியில்லாமல் மொட்டையுடன் நாமம் போடுவதற்கு வேறு வழியில் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.

4 comments :

 1. பாலா இயக்குநராய் இருந்தவரை தயாரிப்பாளருக்கு செலவுகளை இழுத்து வைப்பவர் என பெயர் எடுத்தவர்.

  சில வருடங்களாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பதால், நீங்கள் சொல்வது போல நடக்க கூடும்.

  சட்டென்று எழுதி, இடுகையாக போட்டுவிடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் எழுத மெனக்கெடலாம் நீங்கள்.

  உங்கள் Font படிக்க வசதியில்லாமல் இருக்கிறது. பலருடைய பதிவிலும் இருப்பது போல மாற்றுங்கள்.

  ReplyDelete
 2. கருத்துரைக்கு நன்றி! தோழர்.மெனக்கெடலாம்தான் டைப் அடிக்க முடியாத காரணத்தால் விரிவாக எழுதியதை குறைக்க வேண்டியுள்ளது. வேலை இல்லாத நேரங்களில் மெனக்கெடலாம்.தளம் ஆரம்பித்தது பிறர் உதவியின்றி அரைகுறையாக அமைத்துள்ளேன். அனுபவம் ஏற்ப்பட கற்றுக்கொள்கிறேன் தோழர்.

  ReplyDelete
 3. துணை நடிகர்கள் என்ற ஊழியர்களை கண்டு கொள்ள ஆட்கள் இல்லை தான்... கோடானு கோடி முறை சாரா தொழிலாளர்களாய் இவர்களும் இருக்கிறார்கள் என்று பலருக்கு தெரிவதில்லை

  ReplyDelete
 4. நீங்கள் சொல்வது உண்மைதான் ஜீவா!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com