வெள்ளி 02 2012

தலைக்கவசம் உயிர் கவசமா????...

புானையை வெட்ட முடியாத நாய் கதை தெரியுமா? உங்களுக்கு...

நாயும் புானையும் எஜமானர் விட்டில் சிநேகமாய் இருந்து வந்தள்ளன.சில நேரங்களில் நாய்க்கும் புானைக்கும் கருத்து மோதல் வரும் போகும். இது மாதிரி ஒரு நாள் நாய்க்கும் புானைக்கும் தங்களின் எஜமான் விசுவாசத்தை
நிருப்பிப்தற்க்காக போட்டி ஏற்ப்பட்டு ,அது குத்து வெட்டு அளவுக்கு போயிருச்சு கோபம் கொண்ட நாயி அருவாளை துாக்கிகிட்டுபுானையை வெட்டுவதற்கு விரட்டியது.

நாயிடமிருந்து மிரண்டு தப்பித்து ஓடிய புானை அருகிலிருந்த பனை மரத்தில் ஏறிக்கொண்டது.விரட்டி சென்ற நாயால் மரத்தில் ஏறமுடியாததால்,கோபம் அடங்காமால் தப்பித்துவிட்ட புானையை பார்த்து நாயி கூறியதாம்..

தப்பித்துவிட்டோம் என்று நிணைக்காத புான உன்ன வெட்ட முடியாவிட்டாலும் உன் பிய்ய வெட்டுவெண்டீ......என்று கூறி புானை பிய்ய  தேடி தேடி வெட்டச்சாம்........

இந்தக் கதை கணக்கா, தமிழகத்து போலீசு,உயிர காக்க தலைக்கவசம் போடு, இல்லையா பில்லக்கட்டுன்னு நாலு முக்கு சந்திப்பு போன்ற முக்கியமான சந்திப்புகளில் பில்புக்கு பையுமாக நின்று கொண்டு இருக்கிறார்கள்.சினிமா கதாநாயகர்கள் மாதிரி எவரும் தப்பித்துவிடமுடியாத படி வசூலில் அக்கறையுடன் இருக்கிறார்கள்




சட்டம் என் கையில் என்பதை நிருப்பிப்தற்கும், ஏற்கனவே
 சுட்ட,கணக்கில்வராத கருப்பு கணக்கை வெள்ளையாக்கி
கணக்கை நேர் செய்வதற்கும்.எஜமான விசுவாசத்தை
நிருபிப்பதற்கும் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்ற
கணக்கில் களத்தில் குதித்துள்ளது.


ஆட்சிக்கு வரும் எந்த கட்சிக்கும் ,எந்த ஆட்சியளார்க்கும்
சமூகத்தைப்பற்றியசமூகத்தின் அங்கமான மக்களைப் பற்றிய, தொலைநோக்கோ,நேர்மையோதிறமையோ எதுவுமில்லை,
அப்பவும் சரி,இப்பவும்சரி,இனி எப்பவும்சரிசமூக அக்கறை,
பொதுநலன், போன்றவை எதுவும் வரப்போவதில்லை.

தங்களைப் போலவே,மக்களுக்கும், பேராசை, சுயநலம்,
கட்டுப்பாடுன்மை,அடங்காதன்ம் போன்றவற்றை இழுத்து
விடும் மூச்சு காற்றைப்போல் பரப்பி விட்டுட்டு சத்தியம்.
தர்மம்,கச்சாமி, என்றால் நடக்குமா?..............

ஒரு காலத்தில்,ஒரு லாட்டரிகாரன் இப்படித்தான். ஆசையை
 விதைத்தான்.நீங்கள் நடந்து போகலாமா?  காரில் போகலாமே!,
பைக்கில் சர்ரென்று போகலாமே! என்றான். அதுக்கு ஒரு
லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி ஆகலாம் என்றான்.

அன்றைய லாட்டரிகாரனைப்போலவே, தனியார் முதலாளிகளின் வளர்ச்சிக்காக,பொது போக்குவரத்தைக் குறைத்து பைக்குகளையும் கார்களையும் சினிமா.தொலைக்காட்சி மூலமாக,ஆசையை ஏற்ப்படுத்திவிட்டு, அதுஇல்லாநிலைமையை உண்டாக்கி
விட்டார்கள்.

கார்ப்பரேட் முதலாளிமார்களின் சரக்கு வாகனங்கள்
தொல்லையின்றி சென்று வர நான்கு வழிக்சாலைகளை உருவாக்கிவிட்டு்ட்டு, மக்கள் அன்றாடம் பயனிக்கும்
.பயன்படுத்தும் சாலைகளை பல்லாங்குழியாக்கிவிட்டு
நிதியில்லை என்ற காரணத்தை சொல்லிக்கொண்டு
விபத்துக்கான பல வழிகளை உருவாக்கிவிட்டு.அதை
களைவதற்க்கான ஒரு துறும்பைக்கூடசெய்யாமல்
தலைக்கவசம் உயிர்கவசம் என்பது பித்தலாட்டமின்றி
வேறு என்னவென்று சொல்லுவது.

செல்போன் கம்பெனி,இருசக்கர,நாலு சக்கர கம்பெனி
இப்படி பல தரப்பட்டகம்பெனிகளின் வளர்ச்சிக்கு உதவியாக
இருந்துவிட்டு, தலைக்கவசம் தயாரிக்கும் கம்பெனியை
அம்போன்னு விட்டுவிடமுடியுமா? இல்ல அந்தக்
கம்பெனிதான் சும்மாதான் இருந்திடுமா???அந்தக் கம்பெனி
வளர்ச்சிக்குத்தான் “தலைக்கவசம் உயிர்கவசம்” விற்பனைக்கு விற்பனையுமாச்சு, கலெச்சனுக்கு கலெச்சனுமாச்சு ...எப்படி!!

மதுரையில் ஒருநாள் கலெச்சன் மட்டும் 1.49 லட்சம்
வசூலாயிருக்கிறது. இதுமாதிரி மற்ற நகரங்களிலும்
 போலீசின் கல்லா பெட்டி நிரம்பாமலா இருக்கும்தலைக்
கவசம் விற்ற கணக்கெல்லாம் தலைக்கவசம் விற்று
முடிந்தபின் அறிவிப்பார்கள்.

தலைக்கவசம் வாங்கியவர்களிடம் விசாரித்தபோது.
“ என்னங்க சார், தலைக்கவசம் உயிர் கவசம்தானே?
என்று கேட்டபோது.” போய்யர்,நீ வேறஆத்திரத்த
உண்டு பண்ணாத... தலைக்கவசம் மயிறுக்
கவசமுன்னு”- போலீசுமீதுள்ள கோபத்தை
 என்னிடம் காட்டிவிட்டார்.

மற்றெருவர், போலீசின் பில் கலெச்சனிடமிருந்து
 தப்பிக்கத்தான் என்றார்.  யாரும் தலைக்கவசம்
உயிர்கவசம் என்று உணர்ந்து வாங்கியதாக தெரியவில்லை.

இருவர். அவர்களுக்கள் பேசிக் கொண்டது,மாப்பிள.
உன் ஆபிசிலதான் கல்லாகட்டறியே, அதுல போலீகுக்கு
 பில்லக் கொடுக்குறதுக்கு என்னப்பா....

ஒருதடவக் கொடுத்து பழக்கிட்டா போச்சுடா மாப்பிள...........

நீ......எப்படி வாங்கிப் பழகிட்டயோ.....அதுமாதிரியா..ஆகிறுமா?,,,,,,,,,

அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பிச்சதுமே...இருவரும்
பேச்சை நிறுத்திவிட்டனர்.

இந்தக் தலைக்கவசம் வேண்டாத சுமையாக சுமந்து
அலைய வேண்டியுள்ளதுஎன்றார்கள் பெரும்பாலோர்.
 பல நாதாரி சல்லிப் பயல்களால, ஒழுங்கானவர்களும் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.ஒருவர்.அதற்குஅவரே
ஒரு தீர்வையும் சொன்னார்.

நடக்காது. இருந்தாலும் சொன்னார். என்னதான் நாயாக
 கத்தினாலும் வேகமாக போறவனை தடுக்கமுடியாது.
 தலைக்கவசத்தக்குப் பதிலா ஒவ்வொரு வண்டியின்
தரத்தக்கு  ஏற்றாற்போல் வேகக் கட்டப்பாடு கருவியை
 பொருத்தச் செய்யலாம். இப்படிச்செய்தால் எந்தச் சல்லிப்
பயலும்பறக்க முடியாது நாலு வீல்காரன்மெதுவா வந்து
ஏத்துனா இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு பொழைச்சுக்கலாம்
போலீசு அக்கறையை கொஞ்சும் குறைச்சுக்கலாம். குடிக்கறவனை குடிக்காதேன்னு தடுக்க முடியாது.குடிச்சிபுட்டு ஓட்டி ஆளு மேல ஏத்துரவனையும் தடுக்க முடியாது.புானையை வெட்ட
முடியாத நாய் கதைதான்.

தலைக்கவசம் இன்னொரு சிரமக்கவசம். தலைக்கவசம்
தயாரிப்பு கம்பெனிக்கு உயிர்கவசம், போலீசுக்கு பில் கலெச்சனும் அவசியமானது.கணக்கில்லாதததை கணக்கில் காட்ட
அவசியமானது.ஆக ,புாவோடு நாறும்வீசுவது போல
, தலைக்கவசமும் வாங்கித்தான் ஆக வேண்டும்..இது
 சாபமல்ல. இது தனியார்மயம்--தாராளமயத்தின் விதி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...