பக்கங்கள்

Monday, May 21, 2012

முத்தத்தினால் புகழ்பெற்ற தேசிய நடிகை...

இந்தியாவுக்கு தேசிய தந்தை யாரென்று கேட்டால் இந்திய
ரூபாநோட்டில் மொட்டைத்தலையுடன் உருளை வடிவ
கண்ணாடியுடன் பொக்கைவாயை பொளந்தபடிசிரிக்கிறா
அழுகிறரா என தெரியாபடிக்கு இருக்கும் உருவம்தான் தேசிய
தந்தை என்று கருவில் வளரும் சிசுகூட சொல்லிவிடும்

காந்திப்படம் போட்ட பணத்துக்குத்தான் செத்த பொணம்கூட
சுடுகாட்டுக்கு நகரும்நிலை இருக்கும்போதும்சரி வந்தவன்
நின்றவன் போனவன் எல்லோரும் அந்த உருவத்தை தூக்கி
கராகாட்டம் ஆடும்போது  அந்த உருவம்தான் இந்தியாவின்
தேசிய தந்தை என்று தெரியாமல் இருப்பதற்கு சான்சே இல்லை.

இந்த தேசிய தந்தைமாதிரியே, தேசிய கவிஞர்,தேசிய பறவை,தேசிய
கொடி,தேசியபறவை,தேசிய மிருகம், தேசியபடை,தேசியவீரர்,
இப்படி.ஒவ்வொரு துறைக்கும் தேசிய ம் இருக்கும்போது,தேசிய
நடிகை என்ற பெயரைப்பெற்றவர் இந்த நடிகை.

எதுக்கெல்லாம் தந்தைகள் இருந்தது மாதிரி.சினிமாவுக்கும்
ஒரு தேசியதந்தை இருந்தார்.அந்த தந்தை தாதா பால்கே என்பவர்.
இந்த தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக.தாதா பால்கே விருது
ஒன்றைத்தொடங்கி அதன் முதல் விருதை முதன்முதலாக இந்திய
தேசிய திரைப்பட வரலாற்றில் முத்தம் கொடுத்து புகழ் பெற்ற
இந்த நடிகைக்கு வழங்கி தேசிய நடிகையாகக்கிவிட்டனர்.

இந்த தேசிய நடிகை நடித்த படங்கள் 14 என்றாலும் முத்தம்
கொடுத்து நடித்த நடிகை என்ற பெயரே அவருக்கு பெரும்
புகழைச் சேர்த்தது.

இருபத்திநூற்றாண்டு நடிகைகளுக்கு குளியல்சீன்,படுககறைசீன்
 கனவுசீன், தொப்புளில் பம்பரம் விடும்சீன் இது மாதிரி கலைச்சேவைக்கு
பயன்படும் அத்தனை சீன்களில் நடிக்கவும்.கதைக்கு தேவையென
கூலூக பேட்டி அளிக்கவும் என் முதன்முதலில் பிள்ளையார் சுழி
போ்டடவர் இந்த தேசிய நடிகைதான்.

இருபதாம் றூற்றாண்டின் தொடக்கத்தில் 1934-ல் வெளிவந்த “கர்மா”
என்ற திறைப்படத்தில்தான்.கதாநாயனுக்கு முத்தம் கொடுத்து
நடிக்கும் கலைச்சேவையை  துவக்கி வைத்தார் இந்த நடிகை.

இவருடைய தாத்தாவான ரவீந்திரநாத் தாகூர் எப்படி இந்தியாவின்
தேசியக் கவிஞராக   மேட்டுக்குடி மற்றும்  ஊடகங்களால்தூக்கி
 வைத்து கொண்டாடப்படுகிறாரோ,அதேபோல இந்த தேவிகா
ராணி என்ற இந்ததேசிய நடிகையும் கொண்டாடப்படுகிறார்.

தேசியநடிகை தேவிகாராணி

திற

1 comment :

  1. ஆஹா..ஆஹாஹா..இதுவன்றோ சமூகசேவை!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com