வியாழன் 17 2012

தமிழ் நாட்டின் ஆத்தாவுக்கு சம்மன் வந்து ஒரு வருடம் ஆச்சு!!!


பிள்ளையில்லா எனக்கு
சொத்தெதற்கு? நான்
நடித்தே சம்பாதித்த
சொத்தெ போதாதா!

முன்னோரு காலத்தில்
தமிழ்நாட்டின் பொன்
மனச் செம்மல்.
புரட்சித்தலைவர்
மக்களின் திலகம்
டாக்டர் எம்ஜியார்
எனக்கு ஒரு
சத்தியம் செய்தார்

தமிழ் நாட்டில் ஒண்ட
வந்த நீ....... ஒட்டாமல்
போய் விடக்கூடாது.
எனக்குப் பின் இந்த
தமிழ்நாடடை நீதான்
காக்க வேணும்.என்
பெயரைச் சொல்லி
ஆளவேணும்

அவரின் ஆன்மா சாந்திக்காக
சத்தியத்தை மனதிலேற்றி
இன்று வரை கொடா நாட்டில்
தங்கி என்னுடம்பை பாராமல்
நாட்டு மக்களுக்கு நான்
என்னவெல்லாம் செய்தேன்

முதல்முறையாக ஆட்சிக்
கட்டிலில் மக்கள் அமர்த்திய
போது,அமரர் ராஜீவை
கொன்றதால் தஞ்சம் மென
வந்தவர்களை விரட்டி
அடித்தேன்.முரண்டு
பிடித்தவர்களை உள்ளே
தள்ளி கம்பி எண்ண
வைத்தேன். தமிழினத்துக்கே
தான்தான் தலைவன் என
இருமாந்து இருந்த
அவர்களை வாயிருந்தும்
ஊமையாக்கினேன்.

ஒண்ட வந்த பிடாரியே!
ஈழத்தமிழரை விரட்டாதே!
என்று என்னை  பழித்தி யும்
எழுதியும் பேசியும் தெரு
வெங்கும்போஸ்டர் ஒட்டிய
தமிழகத்து தீவிர வாதிகளை
செவுளில் அறைந்து உள்ளே
தள்ளி னேன்.

பிள்ளை யில்லா எனக்கு
சுதாகரன் பிள்ளையாக
வந்தான். பிள்ளையில்லா
எனக்கு சொத்து எதற்கு?
ஒரு தாய்  தன்  மகனுக்கு
செய்யும் கடமையாக


உலகமே போற்றும் திருமணமாக
எளிமையாக,சீரோடும் சிறப்போடும்
நடத்தினேன்.அந்தத் திருமணத்திலே
நானும் தோழியும் எவ்வளவுக்கு
எவ்வளவு ஆடம்பரமில்லாமல்,
குண்டுமணி நகை சூடாமல்
எளிமையாக இருந்தோம் என்று
தமிழக்கத்து ரத்தத்தின் ரத்தங்களை

தமிழகத்தில் சந்து பொந்துகளில்
புகழ் பரப்பிய “ஒரு கல்யாண கதை
கேளு” ஒலிசித்திரத்தை கேளுங்கள்
உங்களுக்கே உண்மை புரியும்

என் இரண்டாவது பொற்கால
ஆட்சியில் ,என் பணிக்காக
ஒரு ரூபாய் ஊதியம் பெற்று
பக்தையை துவம்சம் செய்த
சங்கர மடத்து புாசாரியை
அவனின் நெட்டிய பிடித்து
உள்ளேதள்ளினேன. நாத்தீகம்
பேசி மஞ்சள் துண்டு அணியும்
கருனாநிதியே ! செய்யத்
துணியாத செயற்கறிய செயலை
செய்தேன்.அதற்காக,என் சாதி
தினமணியேன்ன,தினமலமென்ன
அவாளின் சங்கங்ளின் பாராட்டு
வசவுகளைவாங்கிக் கொண்டேன்.
எதற்காக?

பிள்ளையில்லா எனக்கு
சொத்திற்காகவா? இல்லை,
இல்லவேயில்லை.

என்னை சீண்டிப் பார்த்து
உள்ளே போட்ட கருனாநிதியை
பதிலுக்கு பதிலாக,“அய்யோ
என்னைக் கொல்லுறாங்களே!
எனகதறவிட்டு என்மீது பயம்
கொள்ளச்செய்தேன். எதற்க்காக?

பிள்ளையில்லா எனக்கு
சொத்து சேர்க்கவா? இல்லை
இல்லவேயில்லை..

ஆடி அசைந்து வேலை செய்து
கொளுத்த சம்பளத்தை ஊதியமாக
பெற்று,தன் பணியை கையுட்டு
பெறாமல் செவ்வனே,செய்து
முடிக்கும்  நன்றி கெட்ட அரசாங்க
ஊழியர்களை சூழற்றி சூழற்றி
விரட்டி யடித்து என் நிர்வாகத்
திறமையை காட்டினேனே!
என்னை புகழாத ஏடுகளும்
வாய்களும் உண்டா?

வாயில்லா ஜீவன்களை பலிகடா
ஆக்கும் மாக்களின் மடமையை
போக்கிட ஆடு மாடு கோழி வதை
தடைச் சட்டம் கொண்டு வந்தேன்

காசுக்காக கடவுளை மாற்றும்
இழிநிலையை போக்கிட மதம்
மாற்றத் தடை சட்டம்  இவ்வளவும்
எதற்க்காக? எதற்க்காக?ஃ

பிள்ளையில்லா  எனக்கு
சொத்தெதற்கு? இருக்கிற
சொத்தே போதாதா?

கருனாநிதியின்  குடும்பத்தின்
அளவில்லா சொத்து குவிப்பின்
கொடுமை தாங்க முடியாமல்
கொடா நாட்டில் சிந்தித்து
கொண்டு யிருந்த என்னை
சிந்தித்தது போதும் என்று
தமிழகத்து ரெங்கநாயகியாக
அன்னலெட்சுமியாக பெரு
வாரியாக என்னை ஆடசிக
கட்டிலில் அமர த்தி யுள்ளார்கள்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
அதனால்தான.சபையை ஜார்ஜ்
கோட்டைக்கே மாற்றினேன்
கேனையனும் கோனையனும்
சேர்ந்து கல்வி வள்ளல்களை
வழிபண்ணிடகூடாது என்பதற்காக
கல்வியை சமச்சீ.........ர் சீராக்கினேன்

மக்களின் தீர்ப்பு கருனாநிதி
குடும்பதிற்கு திரும்பி விட
கூடாது தற்காகவாஅரிசி,குக்கர்
மிகஸி.போன்றவை இலவசமாக
தருகிறேன்இல்லை.இல்லவே
யில்லை.பிள்ளையில்லா எனக்கு
சொத்தெதற்கு?

தமிழகத்தை முன்மாதியாக்கத்தான்
டாஸ்மாக் உள்பட எல்லா விலை
யையும் உயர்த்தினேன். சொத்து
சேர்ப்பதற்கல்ல.படித்தவர்களுக்கு
புரியும்.படிக்கதாவர்களுக்கு புரியாது

நான் கொடா நாட்டில் ஓய்வெடுத்த
போது என்க்காக உழைத்த
பேச்சு புலிகளுக்காக,
செயல் சிங்கங்களுக்காக
தன்மானத் தலைவர்களுக்காக
தொப்புள்கொடி உறவுகளுக்காக
ராஜபட்ஜே மீது சட்டசபை தீர்
மானம் கொண்டு வந்தேன்
எதற்க்காக? எதற்காகஃ

கருனாநிதி குடும்ப ஆட்சியில்
மதுரையிலே  ராஜபட்சேவின
கொடும்பாவி எரி்த்த மதுரை 
விரர்களுக்கு சம்மன் அனுப்பி
வழக்கை ரத்துசெய்யாமல்
இருக்கிறேனே.எதற்காக?
நான் ஈழத்தாயாக இப்பதால்தான்

பிள்ளையில்லா  எனக்கு
சொததெமற்கு ?என்மீது சொத்து
குவிப்பு வழக்கு சம்மனா?

தமிழகத்து ரெங்கநாயகி நான்
தமிழகத்து அன்னலெட்சுமி நான்
புரட்சி தலைவரின் புரட்சி தலைவி நான்
தமிழகத்து செல்வி நான்
தமிழகத்து ஆத்தாவே நான்தான்.
தமிழகத்து ஆத்தாவுக்கே!சம்மனா?


மூன்றாவது இருண்டகாலம் வந்துஒரு வருடம் பூர்த்தி 



குறிப்பு. ஒரு கல்யாண கதை கேளு-
 மகஇக வெளியிட்ட ஒலிப்பேழை

மதுரையில் 2009 ல் ராஜபட்சே கொடும்பாவி
எரித்த விரர்கள .மகஇக.புமஇமு.விவிமு.
அமைப்பு தோழர்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...