பக்கங்கள்

Monday, July 23, 2012

“காகோரி ரெயில் கொள்ளை வழக்கும்” போரிட்டு மாய்ந்த மாவீரர் சந்திரசேகர்ஆசாத்தும்.......

மாவீரர் சந்திர சேகர் ஆசாத்

“காகோரி” என்ற ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி அதிலிருந்த
பிரிட்டீஸ் அரசாங்கத்தின் கஜானாவை இந்திய விடுதலை போராளிகள்
கொள்ளையடித்ததால்“காகோரி ரெயில் கொள்ளை வழக்கு” என்று
பிரபலமாகிவிட்டது. அந்த வழக்கை தொடர்ந்து புரட்சிகாரர்களை பிரிட்டீஸ்
போலீஸ் காரர்கள் வலைபோட்டு தேடிவந்தார்கள்.

அந்த வழக்கில் வெள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்
பனிரெண்டு பேர்கள். அவர்களால் பிடிக்க முடியாமல் தவிக்கவிட்டு
தலைமறைவானவர் மாவீரர் சந்திரசேகர் அசாத்

மாவீரர் சநந்திரசேகர் ஆசாத்தை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து
கொடுப்பவர்களுக்கு 5000-ரூபாய் பரிசு வழங்கப்படும்.என்று அறிவித்து
விளம்பரம் செய்யப்பட்டும் அவரை பிடிக்க முடியவில்லை.

இதோடு, லாலாலஜதிராயின் கொலைக்கு பதிலடியாக ஆங்கிலேயே
போலீஸ் அதிகாரிக்கு பதிலடி கொடுத்த வழக்கிலும்,  பிரிட்டிஸ் போலீ
சால் பிடிக்க முடியவில்லை.

மாவீரர் சந்திரசேகர் ஆசாத்துக்கு 27 வயதாகும்போது. அவர்மீது 28
வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. பிரிட்டீஸ் போலீசாரால் அவரது
வாழ்நாள்  முடியும் வரை ஆசாத்தை பிடிக்க முடியவில்லை.

லாகூர் நீதிமன்றத்தில் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்  மூவருக்கும்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆசாத், சிறைக்
கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும் விடுதலை செய்து
விடவேண்டும் என்ற சிந்தனையிலே குறியாய் இருந்து அதற்க்கான
செயல்களில் ஈடுபட்டு கொண்டுயிருந்தார்.

அந்த வேலையின் நிமித்தமாக. முன்னால் தோழனும் நண்பனுமான
ஒருவனை சந்திக்க சென்றபோது, அந்த நண்பன் அலகாபாத் ஆல்பிரட்
பூங்காவில் பேசுவோம் என்று சொல்லிவிட்டு பிரிட்டீஸ் போலீசுக்கு
 ஆள்காட்டி வேலையை செய்துவிட்டான். பழைய விடுதலை போராட்ட
நண்பனை நம்பி மாவீரர் ஆசாத்  அவனுடன் பூங்காவுக்கு போனார்.

1931ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் காலை 10 மணிக்கு பூங்காவிலுள்ள
மரம்,செடி உள்ள மறைவிடங்களில் எல்லாம் 60,70 போலீஸ் ஒளிந்து
கொண்டு இருந்தார்கள்்

நிலமையை புரிந்து கொண்ட மாவீரர் ஆசாத் ,நம்பி வந்த நண்பன் காட்டி
கொடுத்துவிட்டு ஓடிவிட்டாலும். அச்சப்படாமல்.ஒரு பெரிய மரத்தின்
பின்னால் ஒளிந்து கொண்டார்..அவர் ஒளிந்து கொண்டதைக் கண்டதும்
60.70 போலீசுகாரர்களும் சரமரியாக சுட்டார்கள். மாவீரர் ஆசாத்தும்
பதிலுக்கு சுட்டதால் பல போலீசார். காயம்பட்டு வீழ்ந்தனர்.

 வெறிக்கொணட் போலீஸ்  ஆசாத்தை சுற்றி வளைத்து சரமரியாக
சுட்டது. தொடையில் குண்டடிபட்ட ஆசாத் சரிந்தபோதும், சரிந்தவரை
சல்லடையாக துளைத்து எடுத்தார்கள்..

அப்படி சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டும் ஆசாத் உடல்
அருகே செல்ல போலீஸ் படைகள் அஞ்சி நடுங்கியது. திடீரென்று
எழுந்து சுடத் தொடங்கி விடுவாரோ என்று பயந்து நடுங்கிய அச்சத்
தால் நெருங்க அஞ்சினார்கள்.

 காலை 10 மணிக்கு சுடப்பட்டு சாய்ந்த மாவீரர் ஆசாத்தை மாலை
5மணி வரையிலும் பிரிட்டீஸ் போலீஸ் படை நெருங்கவில்லை.
அந்தப் பயத்தினால் உயிர் பிரிந்த அவரது சடலத்தின் மீது மீண்டும்
பலமுறை சுட்டார்கள். துப்பாக்கி கூர்வாளால்  ஆசாத்தின் மார்பை
பலமுறை குத்தினார்கள். அப்போது்ம் அவர்களுக்கு பயம் தெளிய
வில்லை.


பயமும் ,வெறியும் அடங்காத வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவன்
தனது நாயை ஏவி விட்டான். அந்நாய் மாவீரர் ஆசாத்தின் உடலில்
இருந்து வழிந்த இரத்தத்தை நக்கிய பின்பே, போலீஸ்காரர்கள் அவரது
உடலை தொட்டார்கள். பயத்தின் விளைவாகவும் ஆசாத்தின் உடலை
பூட்சு காலால் உதைத்தார்கள்.பின்னர்தான் அவரது உடலை தொட்டு
தூக்கி போலீஸ் வண்டியிலே தூக்கி போட்டார்கள்.மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில்
 ஒருநாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்கவும்முடியவில்லை,தொடவும்
முடியவிலலை. பிடிக்கவும் முடியவில்லை, ஆல்பிரட் பூங்காவில் 80
குண்டுகளை தாங்கி சாய்ந்த பிறகுதான். வெள்ளை பயங்கர போலீஸ்
அவரது உடலை தொடமுடிந்தது.   


ஆசாத் மீது இருந்த 28  பிடிவாரண்டு வழக்குகளிலும், போலீசார் அளித்த
வாக்குமூலம் என்ன தெரியுமா????

சந்திரசேகர் ஆசாத்தை இந்தியநாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை
கண்டு பிடிக்க எங்களால் முடியவில்லை.. என்பதே!!!!!!!!!

அதே வழியில் வந்த இந்திய போலீசும் ஆசாத் பெயர் கொண்ட  நக்சல்பாரி
தோழர்களை எண்கவண்டரில் சுட்டுத்தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
 மாவீரர் சந்திரசேகர் ஆசாத் தோன்றி கொண்டே இருப்பார். பரங்கிய போலீசும்
சரி, அவர்கள் வழி வந்த இந்திய போலீசும் சரி சந்திரசேகர் ஆசாத் என்ற பெயரை அழித்து விடவே முடியாது.
தோழர் ஆசாத்( வினவு)

3 comments :

  1. அவரது ஆத்த்மா சாந்தி அடைய எனது பிராத்தனைகள்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு நல்ல ஒப்பீடு

    ReplyDelete
  3. கூகிள் நண்பர் பட்டியை இணைத்தால் பதிவுகளை பின் தொடர வசதியாக இருக்கும் !!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com