வியாழன் 02 2012

ரெடி ...ஸ்டார்ட்..... ஆக்ஸன்.....நாம்.....இ.........................






ஈக்கு வாழ் நாளே பத்து நாள்தானே! அதுக்குள்ள அது வந்து மனித பிறவிய பழி வாங்குதா?? என்றெல்லாம் கேட்கக் கூடாது. உங்க காதுல, சின்னதாகவோ இல்ல ஒரு முழமாகவேர் பூ வச்சாலும் கண்டுக்கககூடாது.. மணி  செந்திலுக்கு சொன்ன மாதிரி, கோழி குருடா இருந்தாலென்ன நொண்டியா இருந்தாலென்ன கொழம்பு ருசியா இருக்குதான்னுதான் பாக்கனும் அது மாதிரி

கதைக்கு வாலுமில்லை.காலுமில்லை என்பார்கள்.ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கே இடமில்லை.இப்படித்தான் ஒவ்வொரு சினிமா படமும், யாருமே
சொல்லாத ஒரு மெஜேஸ் இருக்குன்னு ஓப்பிப்பாங்க.... அத அப்பவே மறந்திடனும்.....நிணச்சுகிட்டு இருந்தீங்கன்னா ரசிகனாக இருக்க உங்களுக்கு
தகுதியே  இல்லேன்னு அர்த்தம.

சமீபத்தில் வந்து பறக்கிற நான்..ஈபடத்துக்கு சினிமா ரசிகஅறிஞர்களும்,
விமர்சன விஞ்ஞானிகளும், ஆகா,ஓகோ ன்னு கொய்ய்யன்னு புகழ்ந்து தள்ளுகிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு இணையாக  என்று புகழ் மாலை
வேறு.சூட்டுகிறார்கள்

ஊர கொள்ளையடிச்சு உலையில போட்ட மாதிரி. மற்ற நாடுகளில் கொள்ளை
யிட்ட நாட்டில்.பஞ்சம்,பசி.வறுமை, வேலையின்மை என்பது ஒப்பிட்டளவில்
குறைவு. அதனால் அங்குள்ள சினிமாக் கதைகள் விண்வெளியைப்பற்றியும்
அதிசியமிருகங்கள் பிராணிகள்பற்றியும், நம்பமுடியாத பல சாகசங்கள்
நிறைந்த படங்களை எடுத்து குவித்துவிட்டார்கள். வேறு சிந்திக்க வழியில்லாமல் “பழையபடி கதவைத்திற” கதையாக அரைத்த மாவையே
புதிய தொழில் நுட்பத்தில், தந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய போன்ற நாடுகளில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்
அதெல்லாம்வசூலுக்கும்,பேருக்கும் ஆகாது என்பதால் மேலை
நாடுகளில் கழித்து கட்டியஇந்திய நாடுகளில் புளுத்து ஊசிப்போன
 ஊறுகா மட்டய கதைகளைக் கொண்டு நான்..ஈ   நான்..கொசு ன்னு விளித்துக்கொண்டு புதிய மொந்தையில் காட்டுகிறார்கள். இவர்கள
மொழியில் வெற்றி என்றால் போட்ட முதலுக்கு மேல் கல்லா நிரம்பி இருந்தால் வெற்றி!!

டாஸ்மாக்கு பழக்கமான குடிமகன் குடிக்காமல இருக்க முடியாத காரணத்தினால் கலப்பட ,போலியான டாஸ்மாக்கை பருகி அன்றைய பொழுதை கழிப்பது மாதிரிதான் சினிமா போதை பிடித்தவர்களுக்கும்.

அநியாய போலீசை,அதிகாரியை,அமைச்சர்களை, மக்களுக்கு எதிரான
ஆட்சியாளர்களை,தனக்கு கொடுமை செய்பவர்களை தட்டி கேட்க முடியாத
பச்சோந்தி தனமிக்க பொழுப்பு கூட்டம் புதிய தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி ரசிகர்களை வேறு பக்கம் திரளவிடாமல் கட்டி காக்கும் கைங்கரியங்கத்தை செவ்வன செய்து வருகிறது.

பாமரனுக்கு  கஞ்சியே இல்லாதபோது, தொட்டுக்க ஊறுகாய்போன்றதுதான் இம்மாதிரியான படங்கள்.

 அடுத்தாக  நீ... கொசுன்னு  படம் வந்தாலும் வரலாம். அறிஞர்களும் விஞ்
ஞானிகளும் தயாராக இருங்கப்பா........




நீ......கொசு...............




3 கருத்துகள்:

  1. ஸ்பானிஷ், கொரியன் டைப் படங்கள் எடுத்தால் சென்சார் ஒத்துக்காது...
    ஈரானியன், ரஷ்யன் டைப் படங்கள் எடுத்தால் நாய் கூட தியேட்டர் பக்கம் ஒதுங்காது...
    வேற எந்தமாதிரி எடுத்தால் ஜனங்களுக்கும் புடிக்கணும், தயாரிப்பாளரும் பொழைக்கணும்!!
    ஐடியா இருந்த சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னால் குடியரசு தலைவரு எந்தெந்த நாட்டுக்கு போனார் என்ன செய்தாருன்னு எடுக்கலாம். அப்புறம் தமிழ்நாட்டு அம்மா,சொத்து குவிப்ப வழக்கில எப்படியெல்லாம். கில்லாலங்கடி வேலை பண்ணுனாங்க. பன்னிகிட்டு இருக்காங்கன்னு எடுக்கலாம்,இராவணுவ படத்துக்கு எப்படி கஷ்டப்பட்டு பழங்குடிமக்களையும் மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடுவதையும் எடுக்கலாம்“.போட்ட முதலுக்கு வஞ்சகமில்லாம தயாரிப்பாரு பொழைக்கலாம்.

      நீக்கு
  2. #சொல்லாத ஒரு மெஜேஸ் இருக்குன்னு ஓப்பிப்பாங்க.... அத அப்பவே மறந்திடனும்.....நிணச்சுகிட்டு இருந்தீங்கன்னா ரசிகனாக இருக்க உங்களுக்கு
    தகுதியே இல்லேன்னு அர்த்தம#
    அருமை உள்ளமே.
    http://newsigaram.blogspot.com/2012/06/blog-post.html

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....