இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயேரின் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் ஒரு அளவு இல்லாமல் இருந்த காலத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தலைமறைவாக இருந்தனர்.
அந்த நேரத்தில் போராளி இளைஞன் ஒருவனுக்கு கொடிய உயிர் கொல்லி நோயான அம்மை நோய் கண்டு இருந்தது. அந்தக் காலத்தில் அது பயங்கரமான தொற்று நோயாக கருதப்பட்டது. தலைமறைவாக இருந்த அந்த நேரத்திலும் மனிதாபிமான மாவீரர் தோழர்பகத்சிங் எதற்கும் அஞ்சாமல் அம்மை கண்ட இளைஞனின் அருகிலே இருந்து இரவும் பகலுமாய் அந்த இளைஞனுக்கு தொண்டுழியம் செய்து வந்தார்.
பின்னாளில் அம்மை நோயிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த அந்த போராளி இளைஞன் போலீசாரிடம் பிடிபட்டபோது போலீஸ் சாட்சியாக மாறி எல்லோரையும் காட்டிக் கொடுத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை