பக்கங்கள்

Wednesday, August 22, 2012

கிரானைட் கிங் & மபியா கும்பல்களை தண்டிக்க முடிமா?????????.................கிரானைட் கிங் என்று   இந்திய ஏற்றமதி நிறுவனத்தால் அழைக்கப் பட்ட கிரானைட்ஊழல் புகழ் பி.ஆர்.பழனிச்சாமி  மேலூர் வட்டத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர், அதிமுக விசுவாசியாக.சாதாரண மனிதராக இருந்த இவர்.கிரானைட் தொழில் தொடங்கியவுடன்அம்மாவின் தோழியின ்குடும்பத்துடன்நல்லுறவை எற்ப்படுத்திக்கொண்டு தனது
கொள்ளையை துணிவுடனே அடிக்கத் தொடங்கினார்.

2006ல் தமிழ் நாட்டு நாற்காலியில் ஆள் மாற்றம் ஏற்ப்பட்டவுடன்
அண்ணன் அழகிரியின் அதிகாரம் ஆரம்பமானவுடன் அண்ணனின்
 பினாமி நிறுவனமான ஒலிம்பஸ் நிறுவனமும் கொள்ளையில்
 குதித்தது.

தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் எந்த கட்சி வந்து அமர்ந்து அதிகாரம் செய்தாலும் ஆளும் அதிகாரிகள் கட்சிகளுக்கு பயந்து பின் வாங்கு வதில்லை.வழைப்பழம் தின்னாத குரங்கு இந்த லோகத்திலே பார்க்க முடியாதபோது. கரன்சிக்கு மயங்காத அதிகாரிகளே கிடையாது.
கரன்சிக்கு மயங்கும் இவர்களின் கூட்டணியோடதான் கிரானைட்
கொள்ளை கனஜோராக நடந்திருக்கிறது.

நேர்மையுள்ள அதிகாரிகள் பழிவாங்கப்படுவார்கள்.ஓரங்கட்டப்
படுவார்கள், அப்படித்தான் கிரானைட் கொள்ளையை கண்டுபிடித்த
மதுரை மாவட்ட முன்னால் ஆட்சித்தலைவர் மாற்றப்பட்டுள்ளதற்கு
ஒரு சான்று.நேர்மையானஅதிகாரிகளும அறிதிலும்அரிதான சொற்ப
பேர்கள்தான் உள்ளனர். சொற்ப பேர்களால்  கெட்டுப்போன கத்திரிக்
காயகூட புடுங்கி எறிய முடியாது.அம்பலபடுத்தத்தான் முடியும். அதைத்தாண்டி எதுவும் செய்யமுடியாது

அரை நிர்வாண பக்கிரி வாங்கி கொடுத்த சுதந்திர நாட்டில் எந்த ஒரு
 சிறிய ஊழல் மீதும்நடவடிக்கை எடுத்துதண்டித்தாகவோ,ஊழல்
பேர்வழிகளின் சொத்தை பறிமுதல செயததாகவோ 65வது ஆண்டுகளில் வரலாறே கிடையாது.

இப்படிபட்ட ஊழல்களில் மீது நடவடிக்கை எடுக்கிற தைரியமும் யோக்கியதையும்யாருக்குமே இல்லை. ஓட்டு போடுவதையே மகா
 ஜனநாயக உரிமையாக கருதும்மகா ஜனங்களுக்குகூட இல்லை
.தேனை எடுத்தவன புறங்கையை நக்காமல் இருப்பானா?
ருசி கண்ட பூணை சும்மா இருக்குமா? என்று சொல்லிக் கொள்கின்ற பழமொழிகளே மகா ஜனங்களுக்கு எதிராக சாட்சியாக வருகின்றன.

உச்சாணி கொம்புலே உட்கார்ந்து கோல் எடுத்த ஆட்டுகின்ற,கடைசி வாய்ப்பாக கறுதுகின்ற நீதிமன்றமோ அநீதிமன்றமாக இருக்கின்றன. தமிழ்நாட்டு ஆத்தாவின் ஊழல் வழக்கை பணிரெண்டு வருடங்களாக இழத்தடிக்கும் சான்று ஒன்றே போதாதா........

அரசியல் கட்சிகள் ஆளுவதோஅய்ந்து வருடமென்றால் ,ஆளும்போது
 அடித்த ஊழல்வழக்கை நடத்தி முடித்து ஒப்புக்கு சப்பான தீர்ப்பு
சொல்வதற்கு ஏழு தலைமுறை ஆகிவிடும். இருக்கின்ற ஆதாரங்களை வைத்து உடனடியாக தீர்ப்பு சொல்கின்ற வல்லமையோக்கியதை.
தைரியம் எதுவும் நீதிமனறத்துக்கோ,நீதி அரசர்ர்ர்க்கோ இல்லை,
இந்தநீதிமன்றம்தான்தனியார்மயம்,தாராளமயத்தாலஇந்திய
நாட்டின்இயற்கை வளங்களைபன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை
 அடித்து செல்வதை நாட்டுபபற்று இல்லாத அநீதி மன்றங்கள்
அங்கிகரித்து வருகின்றன..பன்னாட்டு கம்பெனியையே
அங்கிகரிக்கும்போது உள்நாட்டு கம்பெனிக்கு அங்கிகாரம் இல்லாமலா இருக்கும்.

இந்த நிலையில் கொலை,கொள்ளை,அபகரிப்பு,சுற்றுக்சூழல் பாதிப்பு போன்றவற்றடன்மலையாள மாந்திர்களை வரவழைத்து  நள்ளீரவு பூஜைகளும்,நரபலிகளும் நடத்தியிருக்கின்றன கிரானைட் கிங் என்ற
பி.ஆர்.பி மபியா கும்பல்கள்.....

இந்த கிரானைட் மபியா கும்பல்களின் ஊழல் மற்றும் கொலை போன்ற முறைகேடுகளைமற்ற ஊழல்களைப் போலவே கார்ப்பரேட் ஊடகங்கள அக்குவேறு ஆணிவேறாக பிரித்துகாட்டப்பட்டாலும் இதனால் கிரானைட் கிங்கின் மண்டை மியிரைக்கூட ஒன்றும் செய்யமுடியாது.

65ஆண்டுகாலசுதந்திரஇந்தியாவைஆண்டகட்சிகளின்தலைவர்கள்.
அதிகாரிகள் ஊழல்வழக்களும் இப்படித்தான் அன்றைய ஊடகங்களால் அம்மணக்கபட்ட போதிலும்.அந்த வழக்குகள் அணைத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்டது.

இதேபோல்தான் இந்தியாவின் முதல் ஏற்றமதி நிறுவணம் என்ற
பட்டயம் பெற்றகிரானைட்மபியாகும்பலைஎதுவும்செய்யமடியாது.
நீதியும்,நேர்மையும்.உண்மையும் நிலைக்க வேண்டுமானால்,
கிரானைட் கிங் மபியா கும்பலின வழக்குகள் நீதிமன்ற சவப்பெட்டியில்
அடைக்கப்படுவதை தடுக்க வேண்டுமானால்.மறுகாலனியாக்கத்தை
 மாய்க்க வல்ல ஒரே மாற்று வழியைத்தவிர வேறு வழியே இல்லை....................
No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!