செல்போன் இல்லாத காலத்தில் முன்பொரு சமயம் “ என் பெருமையை
எழுதி ஆயிரம் நோட்டீசாக அச்சடித்து தெருவெங்கும் ஊருகெங்கும்
கொடுக்கச் சொல்லி அச்சாபிசுக்காரன் பொழுப்புக்ககு ஆதரவாக பாம்பு
பேசியதாக “வதந்தீ” பரவியது.
பின்பு ஜவுளிக்காரனுக்கு அதரவாக, சகோதரனிடம் சென்று பச்சை கலர்
சேலை கட்டவேண்டும் .இல்லையென்றால் சகோதரன் செத்து போவான்
என்று பச்சைகிளி பேசியது....
அப்புறம்.இப்புறம், இப்படியாக பாம்பு,பல்லி,பூரான் கொசுவு, நான் ஈ என்று
வரிசையாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோரிக்கையுடன் பேசியது....
இப்போது பிறந்த குழந்தை ஒன்று தமிழில் பேசி அசத்தி யுள்ளது. ஊரெல்லாம்
காலரா,டெங்கு,மூளை காய்ச்சல் பரவி வருகிற நேரத்தில் வெயிலின் கொடுமையும், பவர்கட்டு அநியாயமும் பெருகி இருக்கிற நேரத்தில்...........
நான் அதிகாலை 4 மணிவரைதான் இருப்பேன். அதற்குள் 4 ஆயிரம் குழந்தை
களை கொல்லுவேன் என்று பேசி, பரிகாரத்துக்கு ஆதரவாக குழந்தைகள்
ஆண்களின் மண்டையில் தேங்காயும் சூடத்தையும் மூனு தடவை சுற்றி
முச்சத்தியில் தேங்காயை உடைத்தால் நான் கொல்லமாட்டேன்.என்று..
அதாவது லஞ்சம் வாங்கும் போலீசு சொல்றமாதிரி, இவ்வளவு தொகை
கொடுத்தால் வழக்கு பதியாமல் விட்டுவேன் என்று..... அந்தக் குழந்தையும்
தேங்காய்வியாபரிக்கு ஆதரவாக ஒரு தேங்காய் சூடத்துடன்
பேசியிருக்கிறது.
விக்கிரமாதித்தனுக்கு கதை சொல்லும் வேதாளம் கதைக்கு விடை
தெரிஞ்சவுடன் சொல்லலேன்னா, ஓம் மண்டை சுக்கு நூறாக ஒடஞ்சு
போயிடுமுன்னு மிரட்டும், வேதாளத்தின் மிரட்டலுக்கு அப்பேற்ப்பட்ட
சூராதி சூரனே மிரண்டு போனாரு........
கேவலம் ஏட்டுக்கல்விய அரகுறைய படிச்சுபபுர்ட்டு வீட்டு வேலைகளில்
முடங்கி.டீவி தொடரே கதின்னு கிடக்கும் தாய் குலம்தான் பயப்படமா?
இருக்கத்தான் முடிமா?............
பொதுமக்களை அடிப்பதற்கும், திட்டுவதற்க்கும் சம உரிமை பெற்றுள்ள
பொம்பள போலீசே...! ஆம்பள போலீச பாத்து பயப்படுது.............
மேலும் தமிழகத்தை புடுச்சு ஆளும் ஆத்தாவே, வேள்வி நடத்துது இப்படி
கடைந்தெடுத்த பித்தலாட்டமும் அயோக்கியத்தனமும், மூட நம்பிக்கையை
பரப்புகின்றன சாதனங்களும் பல்கி பெருகி நம்ம நாடு அணுஆயுதம் பெற்ற
வல்லரசா இருக்குற நேரத்தில....“வதந் தீ” இதுக்கு மேலேயும் பரவாமா
முடியுமா.???????????????????????
நல்லா கெளப்புராங்கா பீதிய
பதிலளிநீக்கு