புதன் 05 2012

வல்லரசு இந்தியாவின் வெட்ககேடுகள்........


குற்றம் செய்தவர்களும்,குற்றத்திற்கு துணை புரிந்தவர்களும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.குற்றம் செய்யாதவர்களும், குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களும்,இருக்கககூடிய சட்டத்தையும்,விதிகளையும் மதித்து நடப்பவர்களும்,பாமரர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள்,தண்டிக்கப்படுகிறார்கள.நூற்றுக்கு ஒன்னோ,ரெண்டோதான் உண்மையான குற்றவாளிககள் தணண்டிக்கப்படுகிறார்கள். இது சுதந்திரம் பெற்றதாக சொல்லப்டும் காலத்திலிருந்து இந்தக் கதைதான் நடந்து வருகிறது.

குறிப்பாக. வல்லரசு இந்தியாவின் நிகழும் ஒவ்வொரு குற்றச் செயல்கள் போலவே. போக்குவரத்து குற்றச் செயல்களுக்கும் இது பொருந்தும்.நாடு முழுவதும் நடக்கும் செயல்கள் அதை தெரிவிக்கிறது.

அவசர உதவிக்கு மருத்தவ அம்புலன்ஸ் வருவதில்லை,நெடுஞ்சாலை ரோந்து போலீசும் இருப்பதில்லை.அவசர உதவிக்கு அரசு மருத்துவமணைக்கு
போனால் மருத்துவர் இருப்பதில்லை. தப்பித்தவறி மருத்துவர் இருந்து விட்டால் மருத்துவ சாதன வசதிகள் இருப்பதில்லை.மருத்துவமனைக்கு போனால் பண வசதியும் கிடைப்பதில்லை.

சாலை மரணத்தில் வல்லரசு இந்தியாவுக்கு முதல்இடம். ஆறு நிமிடத்திற்கு ஒரு உயிர் பலியாகிற. ஆண்டுக்கு 15 இலட்சம் விபத்துகள்1.4 லட்சம் மரணங்கள். பதிவு செய்யப்படாதவைகளையும் சேர்த்தால் இலட்சம் கோடியாகும்.மரணமடைந்தவர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் வல்லரசு ஒரு லட்சம் மற்றும் சில ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு, தொடர் சிகிச்சை வருமாணம் முதலியவற்றை சிந்திக்காமல, பதிலேதும் சொல்லாமல் கை கழுவுகிறது.வழக்குகூட தொடர முடியாத நிலையே தொடருகிறது.

இதனால் சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசை தண்டிக்க வழி தெரியாமல். நீதிக்கு அப்பாற்பட்டு மரண டாக்டர்களை தண்டித்துவிடுகின்ற நிலையும் ஏற்ப்படுகிறது. இத்தகைய வெட்கக்கேடுகளை
ஒவ்வொரு துறையிலும் வைத்துக் கொண்டு இநந்தியா வல்லரசாகிறது.
என்பது கேவலத்திலும் கேவலமான வெடகக்கேடு அல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...