பக்கங்கள்

Saturday, December 01, 2012

உலகில் அதிகமான பாரத்தை சுமப்பவர்கள்........அந்தக்காலத்தில் பெண்களில் வயித்துக்குள்ளார இருக்கிற குழந்தை ஆணா? பெண்ணான்னு  விக்கிரமாதித்தனின் மந்திரி பட்டி துல்லியமா சொல்லியிறுவாராம்.அந்த மந்திரி எப்படி துல்லியமா சொல்லியிரப்பாருன்னு ஒரு அய்யாவிடம் கேட்டேன்.

 அவர்-சொன்னார்.

கர்ப்பமா இருக்கிற பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் என்றும்
சிறியதாக இருந்தால் ஆண் என்றும் இதை அடிப்படையாக வைத்து சொல்லியிருப்பார். இந்தக்காலத்து சென்னை  வானிலை ஆய்வு மைய்யம் சொல்ற மாதிரி மாறி விடுகிற வாய்ப்பெல்லாம் அந்தக் காலத்தில் இருந்திருக்காது அதனால் பட்டி சொன்னது துல்லியமாக இருந்திருக்கிறது என்றார்.

மேலும் உலகத்தில் பெண்கள்தான அதிகமான(எல்லா) பாரத்தை சுமப்பவர்கள்

ஆண்கள் பாரத்தை சுமப்பவர்கள்ளில்லை.அவர்கள் பாரத்தை
ஏற்றுபவர்கள்.  விதவிலக்காக ஒருசிலர் வயிற்றில் ஏற்ப்பட்ட பானையை சுமப்பார்கள் அவர்கள் பாரத்தை சுமந்தவர்கள் அல்ல என்றார்.

2 comments :

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com