அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி....
காட்சி---1
மாணவன்-1. டேய் இங்கப்பாருடா... நம்ம வகுப்புக்கு பாடம் நடத்தப்போறவன் தீண்டத்தகாதவனாம்..டா...
மாணவன்-2.....“இது எங்கப்பாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான்டா..”
மாணவன்-3....டேய்...இதுல அந்த தீண்டத்தகாதவன் நமக்கு இங்கிலீஷ்ல பாடம் நடத்தப் போறானாம்டா..!!!!!”
(இப்படியாக அந்த வகுப்பறை மாணவர்கள் திண்டத்தகாதவர்களைப்பற்றி எள்ளி நகையாடி சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்“)
காட்சி-2
மாணவர்கள் குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்த . அந்த ஆசிரியர் வகுப்பு அறைக்குள் வந்து பேசுகிறார்.
(ஆசிரியர் பேசி முடித்ததும். அந்த வகுப்பறை சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
ஆசிரியர்-....“ சரி, நாம் பாடத்தை துவங்குவோமா....?????
காட்சி-3
இடைவேளையின் போது professorகளுக்கான அறையில் வைக்கப்பட்டு இருந்த பானையில் புதிதாக வந்த ஆசிரியர் நிீர் அருந்த முயலுகிறார். அப்போது ஒருவர் குறுக்கிடுகிறார்)
குறுக்கிடுபவர் -....“ டாக்டர் அம்பேத்கர்...............”
டாக்டர் அம்பேத்கர்:- “யெஸ்...”
குறுக்கிட்டவர்:- நான் புரபசர் திரிவேதி....இங்கு வைத்ததுள்ள குடிதண்ணீர் இங்கு பணிபுரியும் புரபசர்களுக்கு மட்டும்தான் ”
டாக்டர் அம்பேத்கர்:- அப்படியென்றால“ நான் யார்???
புரபசர் திரிவேதி:- ..'“யெஸ்..யெஸ்...நீங்களும் புரபசர்தான் நாங்க ஒத்துக்கிறோம்....ஆனா ஒரு முக்கியமான விசயம் என்னான்னா..., நீங்க குடிப்பதற்கு தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டு வரவேண்டும்.
(டாக்டர் அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து சொல்கிறார்)
டாக்டர் அம்பேத்கர்:- “ இந்தக் குடிநீரை நான் குடிப்பது. மெத்த படித்த உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்.... நீங்கள் அருந்தும் நீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்.
(குவளையில் பிடித்த நீரை அருந்தகிறார். பின் சொல்கிறார்)
டாக்டர் அம்பேத்கர்:- நல்லது. இனி தூய்மைப்படுத்துங்கள்.
( திரிவேதியைப் பார்த்து) திரிவேதி அவர்களே! நீங்கள் மூன்று வேதம் கற்றவர் உங்களுக்கு தீட்டுப்பட்ட நீரை தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே..??
திரிவேதி:- தெரியாதுங்களே.........( தலை குனிகிறார் திரிவேதி)
டாக்டர் அம்பேத்கர்:- “உங்களுக்கு தெரியதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி....
( குவளையை வைத்துவிட்டு, தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு) மீண்டுமொருமுறை சொல்லவா என்று கேட்டுவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் தீட்டு கழிக்கும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொண்டே செல்கிறார்)
டாக்டர் அம்பேத்கர்:- அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.
குறிப்பு:- மேற்படி காட்சிகள் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த அம்பேத்கர் படக் காட்சிகள்... நன்றி!!
இப்ப இது எனக்கும் தெரிஞ்சு போச்சு நண்பரே...
பதிலளிநீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குஇது உண்மையா ,படத்தின் சுவாரசியத்துக்காக சேர்க்கப் பட்டதா :)
பதிலளிநீக்குவரலாறு கூட சினிமாவில் மிகைப் படுத்தப் படும் ,கடவுளின் திருவிளையாடல்கள் போல :)
இந்த ஒரு வியாதியாகப்போய் விட்டது இப்ப பல இடங்களில் .
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குவிளக்கம் நன்று!
பதிலளிநீக்குஅருமையான பதிவு! நான் அந்தப் படம் பார்க்கவில்லை. உங்களுடைய இந்தப் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிக்க நன்றி!
பதிலளிநீக்கு