வெள்ளி 07 2012

யாகமும்.....ஜெப ஆராதனையும்..........





டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஒழிப்பதற்க்காக மதுரை அரசு மறுத்துவ மனையில்.........டெங்கு காய்ச்சல் ஒழிந்து நோயாளிகளின் சாவு பயம் நீங்கிட“ மிருத்திஞ ஜெய” யாகமும் நோயுற்றவர்கள் பூரண சுகம் பெற்றிட“ தன்வந்திரி “ யாகமும் நடாத்தப்பட்டது.

இந்த யாகத்தை தொடர்ந்து 5 கலசங்களில் தண்ணீர் வைத்து பூசித்த புனித நீரைக் கொண்டு டெங்குக்கான சிறப்பு வார்டுகள் மற்றும் பல்வேறு வார்டுகளில் தொளிக்கப்பட்டு நோயாளிகள் உயிர் வாழ பிரசாதமும் வழங்கப்பட்டது.

இந்தியாவின் இந்துவின் பராமக்கிரங்களின் அதிகாரமே ஓங்கி இருப்பதால்
இந்து கோயில்கள்ளில் நடத்தாமல் அரசு மருத்தவமனையிலே  பாதுகாவலர்கள் சூழ நடத்தப்பட்டது.

,இந்து ஓதுவார்களின் பராமக்கிரங்களுக்கு நாங்கள் என்ன? சளைத்தவர்களா? என்ற ரீதியாக இயேசு கிறிஸ்துவையே அரசரக நிணைத்து வழிபடும் கிறிஸ்துவ ஓதுவார்களும் டெங்கு மர்ம காங்ச்சல் போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து மக்கள் மீளவும்,நோய் விலகவும் கூடவே ஒலக அமைதி ஏற்ப்படவும் 24 மணி நேர ஜெப ஆராதனை நடத்தப்பட்டது

சர்ச்சில் இரவு 7மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 7மணிக்கு முடிந்த்து.
மாத்திரை. மருந்து,சத்தான உணவு, சுகாதாரம் எதுவும் தேவையில்லை தண்ணீரை தெளித்தால் நோய் விட்டுப்போகும். 24 மணிநேரம் இடைவிடாமல் ஜெபித்தாலும் மக்கள் நோயிலிருந்து விடுபடுவார்கள் என்ற அஞ்ஞானத்தை மெய்ஞானமாக பரப்புகிறார்கள் அஞ்ஞானிகள்.

புதுப்புது நோய்களுக்கு புதுப்புது மருந்துகளை  கொடுத்து நலமாக்கும் மருத்துவர்களே  யாகத்தையும் ஜெபத்தையும் முன்னிலை படுத்தும்போது
கம்யூட்டரை உருவாக்கி கம்யூட்டர் சாப்ட்வேரை உருவாக்கியவர்களே!
கம்யூட்டர் மானிட்டரில் சந்தனம் கலந்த குங்கும பொட்டு வைப்பதும், கம்யூட்டரில் அமருவதற்கு முன் ஜெபிப்பவர்கள் இருக்கும்வரை அஞ்ஞானமே குத்தாட்டம் போடும்.இத்தகைய அஞ்ஞானிகள் மூடப்பழக்கத்தை மட்டும் பரப்பவில்லை,  தங்கள் பொருப்பிலிருந்து அடிதட்டு மக்களை கை கழுவி விடும் வேலையையும் திறம்பட செய்கிறார்கள்.

4 கருத்துகள்:

  1. கோயமுத்தூரில் பிளேக் மாரியம்மன் இருப்பதுபோல் மதுரைக்கு ஒரு மர்ம டெங்கு கோயில் கட்டக்கூடாதா? அப்படி கட்டி அங்கே போய் டெங்கு டெங்குனு மனியடிச்சா டெங்கு சரியாகுமுனு அரசாங்கத்துக்கு ஐடியா கொடுக்கலாமுனு நெனைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற விஷயத்தில் அதிக ஜால்ரா தட்டுவது ஏ.. பிரான் வகைராக்கலே .அவர்கள் அடுத்தவர்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு ஆருதல் கூறுவது போல் மத பிரசங்கம் செய்வார்கள் .ஓவர் போதனை,


    மூட நம்பிக்கை அறவே ஒழிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...