பக்கங்கள்

Tuesday, December 11, 2012

நிஜ வில்லன்... கதாநாயகனாக................. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலிலும் நரவேட்டையாடிய மோடியே  முதல் அமைச்சராக அமருவதற்கு வாய்ப்பும் வசதியும்  பிரச்சாரமும் இருக்கிறது. அதனால்தான அத்வானி,சுஷ்மா போன்றவர்கள் மோடிக்கு பிரதமராக வருவதற்கு தகுதியும் இருக்கிறது என்று தோசையை மாற்றி போட்டு இருக்கிறார்கள்.

அந்த வாய்ப்புகளின் ஒன்றுதான் நிழலை நிஜமாகக் காட்டும் சினிமா..அந்த சினிமாவை காட்டித்தான் தமிழ்நாட்டை  ஒன்று சாகும்வரைக்கும் ஆண்டு மடிந்தது. மற்றொன்று இரண்டாவதாக இருண்டஆட்சி நடத்திக் கொண்டு  இருக்கிறது .

இந்திய சினிமா படங்களில் வில்லன்களாக நடித்தவர்கள் கதாநாயனக மாறியது மாதிரியே... நிஜத்தில் வில்லனாக இருந்து நரவேட்டையாடிய கொலைகாரர்கள் நல்ல மனிதராக.நிழலை நிஜமென்று காட்டப்படுகின்றன என்பதற்க்கான சான்றுகளில் ஒன்று கோலேகிராப்என்ற தொழில் நுட்பத்தில் உருவானமோடியின் தேர்தல் பிரச்சார வீடியோ”.......

கோலேகிராப் என்ற தொழில் நுட்பமானது 3டியின் அடுத்த கட்டம். இந்த டிஜிடல் கேமராவில் மோடி பேசுவதை படமாக்கி திரையிட்டபோது. மோடியே திரையில் நேரடியாக வந்து வாக்காளரிடம் வாக்கு கேட்பது போல் இருக்கும்.

இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக நரவேட்டையாடிய கொலைக்கார மோடிக்காக பயன்படுத்தி உள்ளார்கள். மோடியின் தமிழ்நாட்டு வாரிசுகள்.

குஜராத்தி மொழியில் மோடி பேசியதை படமாக்கி மோடிக்கு திரையிட்டு காண்பித்தபோது மோடியே நம்பமுடியாமல் அசந்து போனாராம். அந்த நர வேட்டையாடிய கொலைக்காரனின் பாரட்டை பெற்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அதன் இயக்குநர்ரும் ஒளிப்பதிவாளரும்.

எல்லாவகை தொழில் நுட்பங்களும் சினிமாநுட்பங்க்களும் ஏழைக்கு 
பயன்பட்டதாக வரலாறு இல்லை. அது கொலைக்காரகளுக்கு கொலைக்கும் கொள்ளைக்குமே பயன்படுகிறது பயன்படுத்தப்படுகிறது.
என்பதே இந்தியாவில் வரலாறு...................


4 comments :


 1. ஆட்டு மந்தைகளாக மக்கள் இருக்கும் வரை இவை நடந்துகொண்டுதான் இருக்கும்!

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete
 3. நிழல் உலகத்தின் நிஜத்தை பிரதிபலிக்கும் பதிவு...அருமை

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!