புதன் 12 2012

வல்லரசு கனவு கானும் இந்தியாவில் மாதம் பதிணைந்து ரூபாய் சம்பளம் தரும் மாநில அரசு..??????????





அகில உலகம் மதிக்கும் பேரு பெற்ற பணக்கார சாமி அருள்பாலிக்கும் கர்ர்நாடக மாநிலம். அந்த மாநிலத்தில் உள்ளது. உடுப்பிநகர்நகர். அந்த நகரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக 1971ம் ஆண்டில் அக்கு,லீலா என்ற இரண்டு தாய்மார்கள் வேலைக்கு சேர்ந்தார்கள்

இந்தியா வல்லரசாக நெருங்கி கொண்டு இருக்கும் இருபத்தியோர்ராம் நூற்றாண்டான இன்றுவரைக்கும். அந்தத் தாய்மார்கள் இருவரையும் பணி நிரந்தரம் செய்யாமலும்,அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்தி கொடுக்காமலம். அவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது கர்நாடக அரசு.

அந்த இரு தாய்மார்களும் இந்திய சட்டத்தின்படி தங்களுக்குப தர வேண்டிய ஊதியத்திற்க்காக 2001ம் ஆண்டில் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டனர். அந்த நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டதினால்  வழங்கி வந்த பதிணைந்து ரூபாய் சம்பளத்தையும், ரவடியைப்போல் மாறி பழிவாங்கும் நோக்கத்தில் நிறுத்திவிட்டது மாநில அரசு.

அக்கு,லீலாவும் தங்களுக்கு கொடுத்து வந்த சம்பளம் நிறுத்தப்பட்டாலும் வேலையை விட்டு விலகாமல்.கடந்த பணிரென்டுகாலமாக தொடர்ந்து சம்பளமில்லாமல் துப்பரவு வேலைகளை செய்து கொண்டு வருகிறார்கள்.
சமூக அக்கறை கொண்ட சிலர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவ வந்த்தை மறுத்து.பணஉதவியேயா, பச்சாதாபமோ எங்களுக்கு வேண்டியதில்லை எங்களுக்கு தேவை நீதி!! என்றார்கள்.

பணக்கார கடவுளும்,காசுக்கார சாப்டவேர் கம்பெனிகளும் நிறைந்த  கர்நாடகா மாநிலத்தின் அரசின் வக்கிரமும் அற்பபுத்தியும் அடவாடித்தனமும் நிறைந்ததே வல்லரசு கனுவு கானும் இந்தியாவும்........

நன்றி! புதியஜனநாயகம் நவம்பர்2012



3 கருத்துகள்:

  1. சகோ....உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்....நேரமிருந்தால் பார்க்கவும்...http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதிற்கும் நண்பர்க்கு நன்றிகள்!!!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...