நரித்தனத்தையே நாட்டுப்பற்றாகவும் டாக்குமெண்டரி படத்தை சினிமா படமாகவும் எடுக்கும் வல்லமை மிக்க நாட்டுப்பற்றுமிக்க டைக்ரக்டர் மணியான ரத்தினமும்
தாய் மண்ணே............... என்று உளையிடுவதையே இசையாக மாற்றி முதன்முதலாக அறிமுகமாகி புயலாக பேரெடுத்த ரகுவான மானும்.......
ஆக. ரெண்டு நாட்டுப்பற்றுலார்களும் இணைந்து உருவாக்கி வெளியிட்ட படம் “ரோஜா”
இந்தப் படம் உரிமைக்காக போராடும் காஷ்மீர் போராளிகளை கொலை காரர்களாகவும்.இந்துக்களை கொல்லும் மதவெறி பிடித்த படுபாதக கொலை காரர்களாகவும் இந்திய இராணுவம் அப்பழுக்கற்ற தியாகச்செம்மல்கள் நிறைந்த நேர்மையான படையாகவும் ,சித்தரித்து முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாகவும் அந்தப்படம் வெளிவந்தது.
வெளிவந்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு மேல் ஓடியும் கூட்டமில்லாமல் வசூலில்லாமல் இருந்தது. இந்நிலையில் படத்தை துாக்கிவிட்டு மறுபடத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளைக்கு “ரோஜா” பிலிமை பெட்டியில் மூட தயாரானபோது....
அன்றைய மதியக் காட்சியிலும் இரவுக் காட்சியிலும் தியேட்டரில் திடீரென்று கூட்டம் எக்கியது.. இந்த திடீர் கூட்டத்துக்கு காரணம் என்னவென்று விசாரித்தால்........
அந்தப்படத்தில் வரும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக்கழகம்-தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு முழுவதும் அந்தப்படம் ஓடும் தியேட்டர் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக போஸ்டர் இயக்கம் நடத்தியது. ஒருசில இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியும் பல இடங்களில் அனுமதிகேட்டு மனு கொடுத்த தோழர்களை தேடித்திரிந்தது போலீசு.......
திடீர் கூட்டமும் திடீர் வசூலையும் கண்ட தியேட்டர்க்காரர்கள் வியப்படைந்து இந்தப்படத்தை எதிர்த்து தியேட்டர் வாயிலில் ஒட்டிய போஸ்டர்களை படம் தியெட்டரிலிருந்து துாக்கும்வரை அதன்மேல் வேறு போஸ்டர்கள் ஒட்டாதாவாறு பாதுகத்தனர்.
பிறகுதான் பத்திரிக்கையிலும். டீவிக்களிலும் விவாதிக்கப்பட்டு “ரோஜா” என்ற டாக்குமெண்டரி படம் சினிமாகவும், இந்திய அரசாங்கத்தின் செய்திப் படமாகவும் மாறியது.
இப்படித்தான் ஓடாத படத்தை ஓட வைக்கும் ம.க.இக. என்ற பேரும் கிடைத்தது.
உதவி... சினிமா..........திரை விலகும்போது --- புதியகலாச்சாரம். வெளியீடு
மணி த்னம் மீது எனக்கு நல் அபிபிராயம் இல்லை, இருந்தாலும் இது நடுவு நிலைமையோடு எழுதிய பதிவாகத் தோன்றவில்லை. சாரி...........
பதிலளிநீக்குநல்லது. தங்கள் கருத்துரைக்கு நன்றி!
பதிலளிநீக்குஜெய தேவ், இந்த வழியற போக்கன் எதையும் வன்மத்தோடு தான் எழுதுவார். அதனால் இந்த பதிவை கண்டு கொள்ள வேண்டாம்.
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் பெயரில்லாமல் புளுகித்தள்ளக்கூடாது.
பதிலளிநீக்குசகோதர யுத்தம் ..இல்லாத இடம் ஏது? சமத்துவம் உலாவும் இடமே !
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி!திரு. ரமேஷ்.....
பதிலளிநீக்குnalla pathivu
பதிலளிநீக்குஇந்தியில அந்த படம் ட்ப் பண்ணினாங்க படம் சூப்பர் ஹிட் அங்க எந்த் கி.க.மி க இருந்ததாம்... கெக்க்றவன் கெனயா இரு ந்தா.......
பதிலளிநீக்குR Chandrasekaran
இது நடுவு நிலைமையோடு எழுதிய பதிவாகத் தோன்றவில்லை. சாரி...........
பதிலளிநீக்கு