பக்கங்கள்

Monday, February 04, 2013

மாற்றான் மனைவி மீது வழக்கு போட்ட மாற்றான் மனைவியின் கனவன்


என்னங்க இது! கழுத்த சுத்தி மூக்க தொடுற  மாதிரியில்ல 
இருக்குன்னு பாக்குறிங்களா??

சில விடயங்களில் நேராக மூக்கத் தொடலாம். இந்த 
விடயங்களில் கழுத்த சுத்தித்தான் மூக்ககைத் தொட வேண்டியதிருக்கு…………..

மதுரை மாநகரை சேர்ந்தவர் ஒருவர். மதுரை மாவட்ட 
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல்
செய்தார்.

தாக்கலான மனுவை விசாரனை செய்த மாஜிஸ்திரேட் 
வழக்கு தாக்கலானவரின்  பகுதியைச் சேர்ந்த காவல் 
நிலைய போலீஸ் இன்ஸ்பெக்ட்டர்க்கு, தாக்கலான மனுவிலுள்ளவர்களிடம் விசாரனை செய்து இரண்டு 
மாத கால அவகாசத்தில் அறிக்கை தாக்கல் செய்ய 
உத்தரவிட்டார்.

தாக்கலான வழக்கின் விபரமானது.

மாற்றான் ஒருவருக்கு மனைவியாக இருக்கும் பெண்ணுக்கும்.
வழக்கு தாக்கல் செய்தவர்க்கும் திருமணம் நடந்தும்.அதற்கு 
அத்தாட்சியாக ஒரு குழந்தையும் உள்ளதாகவும்.

அந்தக் குழந்தை தாயின் வயிற்றில்  இருந்தபோது 
பிரசவத்துக்காக தாயின் வீட்டுக்குச்சென்ற அவர் 
மனைவியானவர், திரும்ப கனவனரான அவர் வீட்டுக்கு 
வரவில்லை என்றும், பிறந்த குழந்தயை பார்க்கச் 
சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்ததாகவும்,

இவர்கள் திருமணத்தின்போது போட்ட நகைகள் மற்றும் 
சீர் வரிசைப் பொருட்களை மனைவி எடுத்துச்சென்றதாகவும். 
சில வருடங்கள் கழித்து குடும்பம் நடத்த மனைவியை  
அழைக்க ,மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றபோது.., 
இவரின் மனைவியானவர் வேறுஒருவருக்கு மனைவியாக 
வாழ்ந்து வருவதும் அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரிய 
வந்ததாம்.

அப்படி தெரிந்திருந்தும் மனுதாரர் மனைவியை அழைத்தபோது மணைவியும் மாற்றனும். மணைவியின் பெற்றோரும் சேர்ந்து 
கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம்.

தாலி கட்டிய கணவன்  உயிரோடு இருக்கும்போது 
மாற்றானை திருமணம் செய்து குழந்தையும் பெற்ற 
மணைவியின் செயலும்….,

மருமகன் உயிரோடு இருக்கும்போது மாற்றானுக்கு 
திருமணம் செய்துவைத்த பெற்றோரின் செயலும்…..

கட்டிய கணவன்  உயிரோடு இருக்கும்போது தனது  
மணைவியை திருமணம் செய்து பிள்ளையும் பெற்று 
குடும்பம் நடத்திய மாற்றானின் செயலும்

குடும்பம் நடத்த மணைவியை அழைத்தபோது, 
மணைவியை கணவனுடன் அனுப்பாமல் மணைவியின் 
பெற்றோரும் மாற்றனும் சேர்ந்து கொலை செய்து விடுவதாக 
கொலை மிரட்டல் விட்ட செயலும் தண்டிக்கப்படவேண்டிய குற்றங்களாகும். இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் 
என்று மாற்றானுக்கு மணைவியாக இருக்கும்  மணைவியின் 
கணவன்  தாக்கல் செய்த வழக்கின் விபரமாகும்.

இந்த வழக்கின் உண்மைத்தன்மை தெரிந்து. இது எந்தவகையான 
பண்பாடு என அறிந்து. இதில் யார் வெல்வார்! யார் வீழ்வார்!! 
என்பது .இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது, ஏழுகடல்தாண்டி,
ஏழுமலை தாண்டி,ஏழுபாலைவனம் தாண்டி வெளிவரும்
போதுதான் எனக்கும்,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் 
தெரியவரும்.

2 comments :

  1. நல்ல “பண்பாட்டு“ வழக்குத்தான்.

    பொதுவாக நம்மூர் வக்கில்கள் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தாலும்.... நம் நீதிபதிகள் அதை பூதக்கண்ணாடி கொண்டு தேடிக்கொண்டே இருப்பார்கள்....

    இதுவும் நடந்து கொண்ண்ண்ண்டே... போகும்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!அருணாசெல்வம் அவர்களே!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com