பக்கங்கள்

Thursday, February 07, 2013

அதிகார பிச்சை கேட்ட பிச்சைக்கார ஏட்டையா............


ஆட்டோமூலம் ஊர்ஊராக சென்று கோன்ஐஸ்,கப்ஐஸ் வியாபாரம் செய்பவர் சுப்புராஜ் என்பவர். இவர் ஐஸ்வியாபாரம் செய்து கொண்டு இருந்தபொழுது சுப்புராஜ் வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம்.

இவர் சுப்புராஜ்விடம் வந்து ஐஸ்கப் கேட்டுள்ளார் சுப்புராஜோ,பகுதி காவல் நிலையத்தின் ஏட்டையா. என்ற மரியாதைக்காக ஒரு கப் ஐஸ்ஸை இலவசமாக தந்துள்ளார்.

ஏட்டையா ஆறுமுகத்துக்கோ. ஒரு கப்ஐஸ்மட்டுமே வாங்கிச் செல்வது தனது பதவிக்கு கௌவரவ குறைச்சலாக இருப்பதாக கருதி இருபது கப்ஐஸ் தருமாறு கேட்டுள்ளார்.ஒரு கப்ஐஸ் ரூபா 5லிரந்து 20ரூபாவரைக்கும் இருக்கு.

வியாபாரி சுப்புராஜோ, எந்த ஐஸ் கப்பை கொடுத்தாரோ தெரியவில்லை. ஒருகப் ஐஸ்சை மட்டும் கொடுத்துவிட்டு. இருபதுகப்ஐஸ்செல்லாம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்..

ஏட்டையாவுக்கு கோபம்வந்து ,தனது பதவியையும் அதிகாரத்தையும் மதிக்கத் தெரியாத ஐஸ் வியாபாரியை நையப்புடைத்துவிட்டார்.

ஒருகப் ஐஸ்சைக் கொடுத்து, ஏட்டையாவின் பதவியையும் அதிகாரத்தையும் மதிக்கத் தெரியாத வியாபாரி சுப்புராஜோ, ஏட்டையாவிடம் மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஏட்டையாவிடம் வாங்கிக் கொண்டத்தை தாங்கமுடியாமல் ஐஸ் வியாபாரி எஸ்பியிடம் முறையிட, பகுதி காவல் நிலையம் ஏட்டையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

ஏட்டையாவோ  இது மாதிரி அதிகார பிச்சை கேட்பது புதுசு இல்லையாம்,.ஏற்கனவே, அதிகார பிச்சைகேட்ட பிரச்சினையில் ஏட்டையா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுயிருந்தும், ஏட்டையா திருந்தவில்லையாம்.  என்ன செய்வது நூலைப்போலத்தானே சேலையும் இருக்கும்.


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com