ஞாயிறு 01 2013

நவநீதம் பிள்ளையின் வஞ்சப் புகழ்ச்சி...........




தமிழ் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணி என்று இலக்கணம் உள்ளது.

அதில் .இகழ்வதுபோல் புகழ்வதுதான் வஞ்சப்புகழ்ச்சி. அந்தத வஞ்சப் புகழ்ச்சி போலவே, ஐ.நா. மனித உரிமைக்கமிஷனின் தலைவரான நவநீதம் பிள்ளை,

கொலைகார ராஜபட்சேவின் அரசை இகழ்வது போல் இழித்து கடைசியில் அவன் அரசை  புகழ்ந்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களை அழித்தொழித்த போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆராய்வதற்க்காக கடந்த ஒரு வாரமாக சுற்றுப்பயணம் செய்து வரும் பிள்ளை.

பயணத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

உள்நாட்டில் நடந்த போரால் சீர்குழைந்த நாட்டை சீரமைக்க கிடைத்த பயன்படுத்திக் கொள்ளாமல்.சர்வாதிகாரபோக்கை நோக்கி இலங்கை அரசு நடைபோடுகிறது. இதனால் போர் முடிந்த பின்னரும் பாதிப்புகள் குறையவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தபோது.அவர்கள் கொடுமைக்கு ஆளானாதும்,கட்டாயங்களுக்கு ஆளானதும் தெரியவந்தது.

எனினும்,இலங்கை அரசின் மறு குடியமர்த்தல் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு பணிகள் திருப்தி அளிக்கிறது என்றார்.

ஒரு பொதுக்கூட்ட மேடையொன்றில்,போலீஸ் செய்யும் கொடுமைகளை விலாவாரியாக பேசிவிட்டு, கூட்டமுடிவில் கூறப்படும்.நன்றியுரையில் போலீசுக்கு நன்றி!‘ என்று கூறப்படுவதுபோல்தான். நவநீதம் பிள்ளையின் அறிக்கையும்.......


14 கருத்துகள்:

  1. என்னே தமிழறிவு....

    தமிழைப்படியுங்க சார்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் உண்மையிலேயே ஒரு இடதுசாரியா. நல்லதைப் புகழ்வதும், கெட்டதை இடித்துரைப்பதுமே நடுவு நிலைமை. உள்கட்டமைப்புகளை இலங்கை அரசு வடக்கில் நன்றாகவே செய்து வருகின்றது. அதே சமயம் ராணுவ பிரசன்னம், ஆயுதக் குழுக்கள், அரசியல் அடக்குமுறை தொடர்ந்து அங்குள்ளன. அதனை நிவர்த்தி செய்து, சிவிலியன் வாழ்க்கை முறையை நிறுவுவதும், காணாமல் போனோர் பற்றி விசாரிக்கவும், இதுவரைக் காலம் இலங்கையில் சகல தரப்புகளால் அதாவது, தமிழ் புலிகள், பிற தமிழ், முஸ்லிம், சிங்ளள இயக்கங்கள், இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் உலகில் எங்கிருந்தாலும் அவன் தமிழனோ, சிங்களவனோ, முஸ்லிமோ யாரோ கடுமையாக தண்டுக்கப்பட வேண்டும் என்பது நியாயவாதிகளின் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  3. நியாயவாதிகளை எப்படிங்கன்னா கண்டுபிடிக்கறது.
    கூலிக்கு கூவுவாங்களே அவுங்களான்னா?!!!

    பதிலளிநீக்கு
  4. நவநீதம் பிள்ளையின் பேச்சின் குழப்பங்களுக்கு காரணம் அமெரிக்க அண்ணன் முதலே எழுதி கொடுத்தை அவர் படிக்கவும் வேண்டும். அம்மையார் பாவம் என்ன செய்வார்:)
    வலிப்போக்கன் தோழரை பொறுத்தவரை தமிழ் வீரர்கள் சொல்வதை இலங்கை தமிழங்களுக்கு
    தீப்பெட்டியில்லை
    சாப்பாடு இல்ல
    தமிழர்களுக்கு கல்வி மறுக்கபடுகிறது தமிழங்களை சுட்டு தள்ளுறாங்க
    வெளிநாட்டிலே உள்ள ஈழ தமிழர்கள் இலங்கை போக முடியாம தவியா தவிக்கிறாங்க என்று சொல்வதை அப்படியே நம்பியிருப்பார்.
    கட்டமைப்பு வேலைகள் நடப்பது, வெளிநாட்டிலே உள்ள ஈழ தமிழர்கள் விமானத்தை புல்லாக்கி ஜாலியா இலங்கை வந்து என்ஜாய் பண்ணி போவது, நீண்ட காலம் யுத்தம் நடந்த இலங்கையை விட மோசமான நிலையிலே தமிழகத்தில் பல பள்ளிகள் இருப்பது தோழருக்கு தெரிய வந்திருக்காது.

    பதிலளிநீக்கு
  5. உங்க இபேரை வேகநரி என்று சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. நவி அவர்கள் இலங்கையில் சுற்று ப்பயணம் மேற்கொண்டு பலதரப்ட்டவர்களயும் சந்தித்துவிட்ட்த்தான் மேற்படி அறிக்கையை விடுத்துள்ளார்.

    விஜய்நம்பியார் , கமலெஷ் சர்மா போன்ற தரங்கெட்ட இந்தியரளைப்போல் இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் பார்த்ததுபோல் அறிக்கை விடவில்லை.இபோரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்ட தமிழ்நாட்டில்நிலைமை மோசம் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    அகென்ன தமிழ்நாடு இந்தியாவின் மற்ற பகுஐதிகள் எல்லாம் முன்னேறி விட்ட்தா ?சுதந்திரம் கிடைத்துஅ 60 ஆண்டுகளுக்கு சுமது நாடு போர்னால் பாதிக்கப்பட்ட் நாட்டை விட மோசாமாக இருக்கிறதென்றால் இத்தனை காலம் இந்தியா ஆட்சியாளாரள்

    பதிலளிநீக்கு
  7. சுதந்திர்ம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட உமது இந்தியா மோசமாக இருக்கிறதென்றால் இந்திய ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன கிழித்தார்கள்.

    உமது விமர்சனங்கள் இத்தைகைய இழிநிலையில் இருக்கும் உமது நாட்டை பற்றியதாக இருக்கட்டும்.

    தேவையில்லாமல் தமது உரிமைகளுக்காக பேராடும் இக்னத்தின் மீது அவதூறு பே.சாதீர்

    பதிலளிநீக்கு
  8. வெளிநாடுகள் அள்ளிக் கொடுப்பதில் கிள்ளிக் கொடுத்து உள்கட்டமைப்புகளை சிங்கள பேரினவதம் செய்வது தமது மக்களுக்காகவேயன்றி தமிழருக்கல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். வீதிகள் செப்பனிடுவதால் தமிழர் வயிறும் நிறையாது பிரச்சனைகள் தீராது. இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. //உமது விமர்சனங்கள் இத்தைகைய இழிநிலையில் இருக்கும் உமது நாட்டை பற்றியதாக இருக்கட்டும்.//
    எங்கள் நாட்டை நாங்கள் பர்த்துக் கொள்ள எமக்கு தெரியும் ஆனால் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் உங்களை போன்ற ஈழ பிரிவினைவாதிக்க தான் இந்தியாவை இழிவாக தூற்றிக்கொண்டும், இதயம் முழுக்க இந்திய துவே ஷம் வைத்து கொண்டும், மறுபக்கம் உங்க கோமாளிதளமான செயல்களுக்கெல்லாம் நீங்க சொல்கிறபடியெல்லாம் கேட்டு இந்தியா செய்யணும் என்று இந்தியாவிடம் மன்றாடுறிங்க. பணம் கொடுத்து இந்தியாவில் சிலரை தூண்டியும் விடுறிங்க.
    இந்தியா இலங்கை தமிழர்கள் மீது அக்கறையா இருக்கும் ஆனா வெளிநாடுகளில் வாழும் ஈழ பிரிவினைவாதிகளை ஒரு பொருட்டாக மதிக்காது.

    பதிலளிநீக்கு
  10. நூபாராம்பாக் போன்ற விசாரனையில்தான் ராஜபட்சே போன்ற கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவார்களே .அன்றி ஐ.நா போன்ற விசாரனையில் தண்டிக்கபடவே மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  11. நூபாராம்பாக் போன்ற விசாரனையில்தான் ராஜபட்சே போன்ற கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவார்களே .அன்றி ஐ.நா போன்ற விசாரனையில் தண்டிக்கபடவே மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  12. //எருமை சொன்னது-
    நூபாராம்பாக் போன்ற விசாரனையில்தான் ராஜபட்சே போன்ற கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவார்களே .அன்றி ஐ.நா போன்ற விசாரனையில் தண்டிக்கபடவே மாட்டார்கள்//
    திரு எருமை, நீங்க சொன்ன நூபாராம்பாக்க விசாரணை எதை என்பதை தெரிச்சுக்க முடியல்ல. இலங்கையில் உள்ள தமிழர்கள் கூட்டமைப்பு Alliance கேட்டிருக்கு இருவரையுமே புலிகளையும் ராஜபட்சேயையும் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று. நியாயம் தானே. ஆனா பெரிய அண்ணர் அமெரிக்காவுக்கு அப்படி எந்த நோக்கமும் இல்ல. ராஜபட்சேயை தனது வழிக்கு கொண்டுவருவது இல்லையேல் ஆட்சி மாற்றம் செய்வது அவ்வளவே.
    இதை வைத்து தமிழில் கதை எழுதுவதெல்லாம் எம்மை ஏமாற்றவே.

    பதிலளிநீக்கு
  13. திரு. வேகநரியாரே...
    http://socratesjr2007.blogspot.in/2013/03/judgement-in-nuramberg-film-1961.html இங்கு படித்து பாருங்கள்


    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....