பக்கங்கள்

Tuesday, September 03, 2013

நிஜத்தில் சாதிக்க முடியாததை நிழலில் சாதிக்க முடியும்!!!

அண்ணா-ஹசாரேsep 3 -satyagraha-fb-

1960 களில் நடந்த நக்சல்பாரி போராட்டம்,மாணவர்போராட்டம், எமர்ஜென்ஸி போன்ற  வரலாற்றில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை கமர்சியல்  தத்துவதுக்கு ஏற்ப படமெடுத்து  காசாக்கி இதன் மூலம் தான் அரசியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி.வல்லவன் என்று பெயர் பெற்றவர்.

இந்தியில் கமர்சியல் கலந்த  அரசியல் படங்களை எடுத்து பேரும் புகழும் பெற்றவரான பிரகாஷ் ஜா
‘சத்தியாகிரகா’ படம் ஹசாரே-கெஜ்ரிவால் பற்றிய கதையல்ல: பிரகாஷ் ஜா
குண்டாச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டி,நிணைத்த இடத்துக்கு செல்லலாம் என்று தான் நம்பி இருப்பதை. தன் படங்கள் மூலமாக மற்றவர்க ளையும் நிழலை நிஜமென்று நம்ப வைப்பவர்.

ஆக,இந்திய சினிமா உலகில் சமகால அரசியலை ஆராய்ந்து இயக்கியதால் வெற்றிபட இயக்குநர் என்ற புகழுடன் மீண்டும் இதே பாணியில் “ சத்யகிரஹா” என்ற பெயரில்......

அன்னாஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தை பற்றியும்   மெழுகுவத்தி ஏந்தியே ஊழலை ஒழித்து விடலாம் என மனப்பால் குடித்து நடந்தமாபெரும் அந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட மாபெரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றியும், கருவாகக் கொண்டு காரம்,மணம்,குணம் அணைத்து அம்சங்களையும் கொண்ட“ சத்யாகிரஹா” என்ற மாபெரும் படத்தை..

அணைத்து புகழும் தனக்கே, என்ற கணக்கீல்  தானே கதை எழுதி.தயாரித்து இயக்கி உள்ளார்.

நிஜத்தில் அன்னாஹசாரேவின் மெழுகுவத்தி போராட்டம், மெழுகைப்போல் உருகி காணாமல் போனதை .நிழலில் மெழுகுவத்தியால் ஊழல் ஒழியும் என்று இந்தியா முழுவதும்  காட்ட போகிறார்.

விளைவு. நிஜத்தில் சாதிக்க முடியாதததை, முடியாமல் போன வழிகளிலே சாதித்து விடலாம்,சாதித்துவிட்டதாகவும் நிழலில் காட்டுவார், படம் பார்க்கும் மெழுகுவத்திக் கூட்டமும்  மெழுகுவத்தியால்  சாதித்து விட்டதாக புளகாங்கிதம்  அடையும்.

மெழுகுவத்தி ஏந்தும் கூட்டத்திற்கும், நிழலை நிஜமென்று நம்பும் மக்களுக்கும் ஏற்றவாறுதான்  முன்னணி நடிகர்களான இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அன்னா ஹசா ரே ஆகவும், சர்வதேச செய்தியயாளராக கரீனாகபூரும், நடுத்தர வர்க்கத்து போராளி இளைஞனாக அஜய்தேவ்கானும்,  அரசியல்வாதிகளின் தரப்பாக மனோஜ்பாஜ்பாயும் களமிரக்கப்பட்டு இவர்களின் நடிப்பால் மெழுகுவத்தி போராட்டத்தால்  ஊழல் ஒழிப்பதாக,ஒழிக்கப்படுவதாக  நிழலை நிஜமாக காட்டி  சாதிக்க முடியும் என்று காட்டுவார்.


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com