வெள்ளி 20 2013

ஒரு ஊரில் ரெண்டு நல்ல மனுசன்கள்....(உருவகக்கதை)


 ஒரு ஊருல ரெண்டு நல்ல மனுசங்கே இருந்தாங்கே....


இருந்தாங்கலா.... ..........................

அந்த ஊருல இவிங்க ரெண்டு பேரைத்தவிர நல்ல மனுசனுங்க
எவனுமே இல்ல......... அப்பேர்பட்ட இந்த ரெண்டு நல்ல
மனுசனுங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது.

இந்த ரெண்டு நல்ல மனுசனுகளுக்குள் என்ன பிரச்சன வந்தது??

அந்த பிரச்சன என்னான்னா,

அந்த ஊருலுள்ள கோயில்ல இருந்து .ரெண்டு மனுசனுக்குள் யாருக்கு முதல் மரியாதை கொடுப்பதில்தான் பிரச்சன வந்தது. அந்த ஊரிலுள்ள ஏழு அடி உயரமுள்ள பெரியவங்க மற்றும்  சிறியவங்க என ஊரிலுள்ள எல்லாரும் கோயில்ல கூடிட்டாங்க...............

 அப்ப ....பூசாரிகிட்ட ரெண்டு நல்ல மனுசன்ல ஒருத்தன் தன்னுடைய அருமை பெருமைகளைச் சொன்னான்...........


நா..ந்தேன் .   நம்ம கொல தெய்வத்தோட மகிமைய மொத மொதல்ல ரத்த யாத்திர நடத்தி ,நம்ம சாமி ஒன்னுக்கு அடிச்ச இடத்தில வேறு ஒருத்தன் கோயில் கட்டியிருந்தத  இடுச்சு.ஒலகம்பூராவுக்கும் தெரியும்படியா மீட்டு தந்தேன். நாட்டுல எல்லாரும் செங்கல்ல கொண்டவந்து கோயில் கட்ட முயற்ச்சி எடுத்தேன் அதனால எனக்கு மொதல் மரியாதை பதவி கொடுத்தா
நம்ம கொல தெய்வத்துக்கு  சட்டுபுட்னு கோயில கட்டிபுடுவேன் என்றான்.


இதைக்கேட்ட இன்னொரு நல்ல மனுசன்  கன்னத்திலுள்ள  மயிரைத் தடவியபடி செருமினான். பூசாரி அவனைப் பார்த்தான்.

ஊர் ஊரா போயி யாத்திரை நடத்தி சாதித்ததை, நா....இருந்த இடத்திலே சாதித்துவிட்டேன.

“கருவிலே வளர்ந்த குழந்தையை தாயின் வயிற்றைக் கிழித்து”
நம்ம கொல தெய்வத்துக்கு  அபிசேகம் செய்து பலருடைய உயிரை காணிக்கையா செலுத்தியுள்ளேன.இது எல்லோருக்கும் தெரியும்,  இதோடு முதல் மரியாதை பதவியையும் கொடுத்தால்,  இன்னும் நம்ம தெய்வத்திற்கு பலமடங்குகளாக அபிசேகமும் காணிக்கையும்  செய்வேன். நம்ம கொல தெய்வத்தின்  குலப்பெருமையை ஒலகத்தில் நிலநாட்டுவேன் என்றான்.



ரெண்டு நல்ல மனுசன்கள் சொன்னதைக்கேட்ட பூ....பூசாரி சொன்னான்.

 நம்ம சாமி ஒன்னுக்கு அடிச்ச இடத்தை மீட்டது சரியானது பாராட்டப்படவேண்டியது முக்கியம். ஆனா.அது பழைய
கதையாகிவிட்டது. இன்னும் அங்க கோயில கட்ட முடியல.,
அத அப்படியே விட்டுவிட முடியாது. அந்த நல்ல மனுசனையும்
 மறக்க முடியாது. இருந்தாலும்   ..........புதிய வழியில்..............

 நம்ம கொல தெய்வத்துக்காக  “ வயிற்றையே கிழித்து கருவிலே
வளர்ந்த சிசுவைக் கொன்று” அதன் ரத்தத்தை காணிக்கையா
கொடுத்ததில்  நம்ம கொல தெய்வத்துக்கு  பெருமையும் பெரும்
பேரும் வீரமும்  கிடைக்கச்சிருக்கு ...

இதுதான் இன்னிக்கு வரை  புகழுந்து பேசும் பேச்சாக இருக்கிறது.
இதோடு முதல் மரியாதை பதவியைக் கொடுத்தால் இன்னும்
காணிக்கையும் இரத்த அபிசேகமும் செய்து  ஒலகத்துக்கே
முன்மாதரியாக நடந்து  நம்ம கொல தெய்வத்தையே நட்டமா
நிப்பாட்டி  அதன் அருளை  ஒலகம் பூரா  பரப்புவாரு , இப்ப இதுதான் லேட்டஸ்ஸ்........வழி...........

ஆகவே,வயித்த கிழிச்ச  நல்ல மனுசனுக்கே,மொதல் மரியாதை ”
என்று பூசாரி சொன்னபோது, பல்லி கிச்கீச்கிச் என்று கத்தியது.
 “இந்தா நம்ம கொல தெய்வமும்  சொல்லிவிட்டது என்றான் பூசாரி.

ரத்த யாத்திரை நடத்திய  முதல் நல்ல மனுசன், பூசாரியின்
சொல்லுக்கும் பல்லியின் உத்தரவுக்கும் எதிராக எதுவும்
பேசாமல் மனம் புழுங்கிவிட்டு,“ வயிற்றை கிழித்து சிசுவின்
ரத்தத்தை  அபிசேகம் செய்த  சக நல்ல மனுசனுக்கு. “மொதல்
மர்ரியாதை ” கிடைத்ததை  பாராட்டினான்.


குழுமியிருந்த  அந்த ஊரு மக்களோ,   வரும் திருவிழாவில்
நமக்கு ரெண்டு புல்லுகட்டு கிடைக்கும் நல்லா தின்னுட்டு
பேளலாம் என்று நிணைத்தஆட்டு மந்தததைகள் கணக்கா  ம்மே...........ம்மே..........ன்னு கத்திக் கொண்டு கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...