வியாழன் 19 2013

அரவானனா.......? அரவானியா.......?



அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று
 கொண்டு இருந்தார்  சாலையின் ஓரத்தில் ஒருவர்  நின்றபடி
 பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் கண்டதும்.((சிறுநீர் கழிப்பது)
இவருக்கும்  பாட்டுபாடத் தோன்றியது.

சுற்றும் முற்றும் பார்த்தார். பெண்கள் யாரும் சாலையில் வரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு சுவறொரம் ஒதுங்கினார்.

அவர் பாட்டுப்பாடிய சுவரில்,“ இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது ”என்று எழுதிவைக்கவில்லை. மனத்திருப்தியுடன் பாட்டு பாடிக் கொண்டு
இருந்தார்.

ஏற்கனவே.பாட்டுபாடிக் கொண்டு இருந்தவர். பாட்டை முடித்துக்
கொண்டு சென்றுவிட்டார்.

அவர் மட்டும் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது. அந்த நேரத்தில்
முக்காடிட்ட ஒரு நபர்  அவருகில் வந்து நின்றார்.

பாட்டுபாடும் நிணைவில் இருந்தவர். தன்னை ஒட்டி வந்து நின்ற
உருவத்தை கவனிக்கவில்லை. பாட்டு பாடி முடித்து பேண்ட்
 ஜிப்பை இழுத்து விடும்போது வந்து நின்ற உருவத்தை
 கவனித்துவிட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. அவருக்கு அருகில்  முக்காடிட்டு நின்றது திருநங்கை.

பேச்சு மூச்சு இல்லாமல் நடையைக் கட்டினார். முக்காடிட்ட
திரு நங்கையும் பாட்டு பாடிவிட்டு அவருடன் சேர்ந்து பஸ்
நிறுத்தம் வரை  சென்றார். உடன் வரும் நபரின் முகத்தை  பார்க்க
பல தடவை முயற்சித்தார். முக்காடு இட்டதால் முகத்தை சரியாக
பார்க்க முடியவில்லை அவரால்.........

என்னைக் கண்டதும் இந்த விபரத்தை சொல்லி, ஒரு சந்தேகத்தை
எழுப்பினார்.

ஆணாயிருந்து பெண்ணாக மாறியவரா? பெண்ணா இருந்து ஆணாக மாறியவரா? என்று எப்படி? தெரிந்து கொள்வது என்றும். உடைகள்
சுடிதாரா, பைஜாமான்னு எதுன்னு தெரியவில்லை என்றார்.

 இதைக் கேட்டு கொண்டு இருந்த ஒருவர் அவரிடம் சொன்னார்.
ஆனாயிருந்து பெண்ணாக மாறியவர் அரவானன்,
பெண்ணாயிருந்து ஆணாக மாறியவர் அரவானி என்றார்

அருகில் இருந்த ஒரு அறிவாளி,அவர் சொல்வதை மறுத்து,
பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் அரவானன், ஆணாயிருந்து பெண்ணாக மாறியவர் அரவாணி என்றார்.

அந்த இருவரும்.சொல்லியதில் எது சரி? என்று  என்னிடம்
கேட்டபோது., “என்னை, ரஜினி பகதன் ஒருவன் ஒம்போதுன்னு
திட்டினான்., அந்த ஒம்போதுக்கு என்ன அடையாளம்
அர்த்தமுன்னு எனக்கு தெரியல. , நீங்க மயிர் பிளக்கும் விவாதம்
 நடத்திகிட்டு இருக்கீங்க,

 இங்க பாருங்க நண்பர்களே!

இந்தியாவையே குஜராத்தா மாத்த போகுது கொடூர மாக கொலை செய்து  ருசி கண்ட பூனை ஒன்னு, அத தடுக்க முடியாத நாமலெல்லாம் அரவானானா, அரவானியான்னு முதல்ல  யோசிங்க....என்றபோது  யாரும் மூச்சு விடவில்லை. அமைதி நிலவியது.

அமைதி ஆபத்துக்கு அறிகுறின்னு யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

இந்தியாவே.....!!!!!!!!!!!! குஜராத்தாக மாறிவிடுமோ????????????????????
கலவரங்கள் மோடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...