பக்கங்கள்

Tuesday, September 24, 2013

போலீசை பற்றி தெரியாத அப்பாவி தந்தை........!!

கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !

கடந்த 6ந்தேதி திருப்பூரில் போலீசுக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சினையில் .போலீசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 23 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களில் பலர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் ரஞ்சித்குமார் என்ற மாணவரின் தந்தை சுப்பிரமணியன் தன் மகனை ஜாமினில் எடுக்க மறுத்துவிட்டார்.

அதற்கு சுப்பிரமணியன் கூறும் காரணம், “என் மகன் சட்டம் படித்துக் கொண்டு சட்டத்தை மதிக்கவில்லை. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தந்தையின் கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரியாது.எனவே,

சட்டம் படித்தவர்களே! போலீசை மதிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.அதனால் என் மகன் செய்த தவறுக்கு  தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்றார்.

 சுப்பிரமணியன் சொல்லும் போலீசுக்கு, சட்டத்தை மதிக்கச் சொல்லி உயர்நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் பலமுறை புலம்பி உத்தரவிடுவதும்,

அந்த உத்தரவை, சுப்பிரமணியன் மதிக்கும் போலீசு மலம் துடைக்கும்  பேப்பர் அளவுக்குக்கூட மதிப்பதில்லை என்பது அப்பாவியான தந்தை சுப்பிர மணி யனுக்கு  தெரியவில்லை போலும்..

போலீசை மதிக்கச் சொல்லும் அவருக்கு அந்தப்  போலீசு, சாதிவெறி போலீசாகவும், மாமூல் போலீசாகவும், பொய்வழக்கு போடும் போலீசாகவும், கிரிமினல் போலீசாகவும்,என்கவுண்டர் போலீசாகவும்,லாக்அப் கொலை செய்யும் போலீசாகவும் அது தோன்றிய காலந்தொட்டு இருப்பதை   சட்டம் பயிலும் ரஞ்சித்குமார்தான் தன் அனுபவத்தை  அவரின் அப்பாவியான தந்தைக்கு எடுத்துச் சொல்லவேண்டும்No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com