பக்கங்கள்

Monday, September 23, 2013

பறைச்சேரி............புதுச்சேரியாகுமா..........???????..
ஆங்கிலேயனை வசைபாடிய
சுப்பையா ஆங்கில படைக்கு
அஞ்சி பறைச்சேரியில் புகாமல்
புதுச்சேரியில் பதுங்கினார்.


பறைச்சேரியைவிட
புதுச்சேரி சாலை
அய்யருக்கு  அழகாக
இருந்திருக்கிறது......

அய்யரும் வீரமாய் நடை
பயின்றிருப்பார்.அதற்கு
அடையாளமாகத்தான்.
அய்யர் பறைச்சேரியை
பாடாமல் புதுச்சேரியை
குயில் பாட்டில்.........
 பாடியிருக்கிறார்...

பறைச்சேரியில்
ஒரு மண்டபம்
இல்லாததை பாடியிருப்பாரா..........???

புதுச்சேரியில்.........
நாட்டிய மங்கையின்
நினைவாக ஆயி மண்டபம்
இருக்கிறது...........!!!!!!!

பறைச்சேரியில்தான் ஒரு
ஆசிரம் நிறுவியிருப்பார்களா!!!

வங்கப்புலி அரவிந்தர் நிறுவிய
ஆ..சிரமம்  ஒன்று புதுச்சேரியில்
பேறு பெற்று இருக்கிறது.?????


பறைச்சேரியில் ஒரு நிணைவு
தூண்தான் உண்டா???????

புதுச்சேரியில் பீச்ரோடில்
ஒரு நிணைவுச் சின்னம்
உண்டு

மனதில் உறுதி வேண்டும்
மென்று பாடிய பார்ரதியே


எத்துனைதான் ஏணி
வச்சாலும் பறைச்சேரி
புதுச்சேரி ஆகுமா??ஃஅட,
ஆகத்தான் விடுவார்களா???

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com