பக்கங்கள்

Thursday, October 31, 2013

ஈனப்பிறவிகள்..............1.


கருணை உள்ளமும், கடும் உழைப்பும், நேர்மையும் ஒருபோதும் முதலாளிகளுக்கு இருந்தது இல்லை. மக்கள் பணத்தையும், அரசு கஜானாவையும் களவாடுவது, மோசடி செய்வது, பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது, இரட்டை வேடம் போடுவது, பிறரது உழைப்பை அபகரித்துக் கொள்வது ஆகிய அனைத்து ’நற்பண்பு’களுக்கும் சொந்தக்காரர்கள் முதலாளிகள்.இவர்கள் ஈனப்பிறவிகளில் முதல் வரிசையில் உள்ளவர்கள். 

பிறரது உழைப்பைச் சுரண்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பண்பாடே முதலாளிகளின் பண்பாடு. இதனால்தான், ஒரு திருட்டுப் பயலுக்குரிய கூச்சமோ, சொரனையோ இல்லாமல், கோட்டு-சூட்டுடன் உலா வருகின்றனர்.இந்த ஈனப்பிறவிகள்.

வங்கிக் கடன் மோசடி மட்டுமன்றி, பல தொழிலாளர்களது கூலியையும் திருடிக்கொள்ளும் இவர்களுக்கு முன்., சட்டமும், அரசு கெடுபிடிகளும்  மண்டியிட்டு கிடக்கின்றன. 

சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக போட்டோவைப் போட்டு அவமானப்படுத்திய வங்கிகள், பல இலட்சம் கோடிகளை மோசடி செய்த முதலாளிகள் பட்டியலை வெளியிடமாட்டார்கள். ஒருத்தன் பெயரைக் கூட வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்துள்ளார்கள்  அவ்வளவு நேர்மையானவர்கள். ஏழைக்கு ஒரு நீதி! முதலாளிக்கு ஒரு நீதி! இதுதான் ஈனப்பிறவிகளின் மனுநீதி!

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் கருணை வள்ளல்கள் என்று இந்த ஈனப்பிறவிகள் பீற்றிக்கொள்கின்றனர். அவர்களது திறமையால் தான் தொழில்வளமும், லாபமும் பெருகிவருவதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். மறுபுறத்தில், தொழிலாளிகள் உழைக்கத் தயங்குவதாகவும், சங்கம் துவக்கி தொழில் அமைதியைக் கெடுப்பதாகவும் அவதூறு பேசித் திரிகின்றனர், முதலாளிகள். வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மானிய விலையில் எதைக் கொடுத்தாலும் மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்று வாய்க்கொழுப்புடன் பேசுகின்றனர், பேசிவருகின்றனர் இந்த ஈனப்பிறவிகள்.

தொழிலாளியைச் சுரண்டாமல் இனப்பிறவியால் வாழமுடியாது. பொதுச் சொத்தைத் திருடாமல் ஈனப்பிறவியால் கொழுக்க முடியாது. அடக்கு முறைகளைச் செய்யாமல் அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்காக எத்தனை பெரிய கொடூரத்தையும் செய்யத் தயங்காத மாபாவிகளே, இந்த ஈனப்பிறவிகள்.

 சட்டத்தில் ஓட்டை போட்டு பதுங்கிக் கொள்ளும,  பெருச்சாளிகளே .இந்தமுதலாளி என்ற ஈனப்பிறவிகள்.

நன்றி!! வினவு.No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com