பக்கங்கள்

Sunday, October 13, 2013

ஒரே குட்டையில் காட்டும் பல வண்ண மட்டைகள்..அவரு சொன்னாருப்பா..... அந்தப்பன்னியும்.இந்த எருமையும் ஒரே குட்டையில்   படுத்து புரண்டதுன்னு.......

அவரு, பன்னிக்கும் எருமைக்கும் சொன்னத தனக்காக மாற்றி கொண்டு கொண்டது. மஞ்சள் பத்தரிகை நடத்தி.அந்த பத்திரிகை பெயரிலே தொலைக் காட்சி சேவை செய்துவரும் அந்த டி்வி

மணம்.குணம்,காரம் அணைத்தையும் ஒரே குட்டையில் காட்டும் ஒரே டி்வி அந்த  டிவிதான்.

அவனவன் பாட்டுக்கும்,சிரிப்புக்கும், செய்திக்கும்.சினிமாவுக்கும் தனித்தனியாக நிறுவி, ஒவ்வொன்றும்,ஒவ்வொரு விதமா. சிறுசுலிருந்து பெரிசு வரை, (தாயின் கருவரையிலிருந்து வெளி வருவதற்கு முன்னமே ) மூளையின் அணைத்து பாகங்களையும் பூசனம் புடிக்கச் செய்யும் திருப்பணியை செய்துவரும் நிலையில்.

இந்த  டிவிக்காரன்மட்டும். ஒரே குட்டையில் அணைத்து விதமான மட்டைகளையும் காட்டி மூளையை பூசனம் புடிக்கச் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது.

இன்றைக்கு அந்த டிவியில் சரஜ்வதிபடத்தை போட்டு, அந்தக்காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த ஒரே படமன்னு  டைட்டில போட்டு தன் வரலாற்று ஆய்வை வெளிப்படுத்தி தன் தீரச்செயலை காட்டிக் கொண்டது.

 அவனவன் பல டி்வியில் செய்கின்ற காரியத்தை, ஒரே டிவியில் காட்டி செய்வதால் இப்படிபட்ட டிவிக்களை “ஒரே குட்டையில் காட்டும் பல வண்ணமட்டைகள்” என்று பெயர் வைக்கலாம்.


1 comment :

  1. புதிய தலை முறையினர் அந்த மட்டையை தானே trp தரத்தில்முதல் இடத்தில் வைத்து இருக்கிறார்கள் !
    நீங்கள் சொல்வதைப் போல் அவர்களும் தனி தனி மட்டைகள் ஆரம்பிக்கத்தான் போகிறார்கள் !

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com