திங்கள் 14 2013

குரு தட்சனையாக வாயிலே கொள்ளிக் கட்டையை வைக்கலாம்.!!!

பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு, படிக்கிற பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக் கொடுத்தாரு.............

பிள்ளைகளா.....சரசுவதி பூஜையில நீங்க படிக்கிற புத்தகங்களையெல்லாம் வைத்து வழிபட்டால் நீங்கள் சிறந்த அறிவைப் பெறலாம்.

அதனால. சரசுவதி பூஜை அன்னிக்கு விளையாட போயி.மிஸ் பண்ணாம சரசுவதி பூஜையில கலந்து வழிபடுங்கள் என்றார்.

எது எதெல்லாம்  பார்த்ததையும் கேட்டதையும் கேள்வியா கேட்டு,
அவுங்க அப்பனையும் ஆத்தாளையும் துளைத்தெடுத்து ,அதனால, ஆத்தாளிடம் திட்டு வாங்கியும் சோர்ந்து போகாத பள்ளிக்கூடம்
 படிக்கும் பிள்ளைகள்.

ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் குருவான வாத்தியார் சொல்வதில் மட்டும் கேள்விக் கேட்காமல்..................
சரசுவதி பூஜையில் புத்தகத்தை வைத்து வழிபட்டால்,பள்ளி
கூடத்துக்கு செல்லும் போது புத்தக மூட்டையை சுமக்காமல்
தூக்கி எறிந்து விட்டு செல்லலாம்.

ஸ்கூல்பீஸ்,வேன்பீஸ்  போன்ற பீஸெல்லாம் கட்டாமல்
இருக்கலாம் பரிட்சையில் பாசாவதற்கு விநாயகரிடம்  தேங்கய்
உடைக்க வேண்டுவது இல்லாமல், பரிட்சை எழுதாமலே பாசாகலாம்,
சேட்டைகள் செய்தாலும்  ஆத்தாளிடமும் அப்பனிடமும் அடி
வாங்காமல் தப்பிக்கலாம்.

மற்றபடி வாத்திமாரிடம் லீவு லெட்டர் கொடுக்காமல் லீவு போ்ட்டுக்கலாம்.

இப்படியெல்லாம் நல்லதை கொடுக்கும் சரசுவதி பூஜையை வழிபடச் சொல்லும்  வாத்திமாரின் வாய்களிலே.... கொள்ளிக் கட்டையை  குரு தடசனையாக வைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...