ஞாயிறு 27 2013

என்பது வருட வாழ்க்கையில் நாற்பது வருடம் நாட்குறிப்பு எழுதியவர்!!!

புத்தாண்டு பிறந்துவிட்டால் வாழ்த்துக்களுடன் ஒவ்வொரு கம்பெனிகாரர்களும் காலண்டர்களும் டைரிகளும் தங்களின் வாடிக்கையாளர்க்கும்,நண்பர்களுக்கும் இலவசமாக வழங்குவார்கள்

மற்றவர்கள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த பிராண்டுகளை தேடி வாங்கிக் கொள்வார்கள்.

இப்படி டைரி வாங்குபவர்களில் ஒரு சிலரைத்தவிர,பலர் தினசரி காலண்டரில் உள்ள தாள்களை கிழிப்பதற்குகூட மறந்துவிடுவது மாதிரி ,ஒன்றிரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரம்.கூடிப்போனால்  ஒரு மாதம் வரை எழுதிவிட்டு அதை அப்படியே! மறந்து விடுவார்கள்.

இணையம் வராத,வளராத அந்தக் காலத்திலே! அப்படி என்றால்! உலகத்தையே! கிராமமாக்கிய இன்று எத்தனை பேர்  நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடருகிறார்களோ???

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எண்பது ஆண்டுகள்வரை வாழ்ந்த வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகள் விடாது தொடர்ந்து நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார் ஒருவர்.

அவரை தமிழ்நாட்டு மில்டன் என்றும்,தனித்தமிழ்தந்தை என்றும் அழைப்பார்கள். தமிழர்தந்தையான ஈ.வே.ரொ.வுக்கு“ பெரியார் ”பட்டம் வழங்கிய பெண்கள் சங்கத்தின் தலைவியின்  தந்தையுமான மறைமலை அடிகளார் தான்  நாற்பது வருடமாக நாட்குறிப்பு எழுதிவந்தவர்

3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...