வியாழன் 24 2013

சாதிவெறிக்கு அரசனானவர்.கல்விக்கு தந்தையான அவலம்......

படம்.சர்வதேசியவாதி

இந்த அரசர் குமார் புதிய  சாதிவெறி கூட்டமைப்பில் இருப்பவர். இவர் திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தை களைத்துவிட்டு தேசிய பார்வர்டுபிளாக் என்ற கட்சியை தொடங்கியவர். இத்தோடு தன்பெயரை நியுமராலசிப்படி  பி.டிஅரசகுமார்  என்று  பெயரை மாற்றிக் கொண்டவர்.

படித்தவன் பாடம் நடத்தி சம்பாதிக்கிறான். படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தி கொள்ளை அடிக்கிறான் என்ற பழமொழி இவர்க்கும் பொருந்துமாம்.

எஸ.எஸ.எல்சி வரை படித்த இவர் விராலிமலையில் ஒரு நர்சரி பள்ளி நடத்தும் தொழிலை தொடங்கினார். அது நல்ல லாபமாக நடக்கவே, பல ஊர்களில் அடுத்தடுத்து பல  தொழில் பள்ளி கிளைகளை துவங்கினார்.

இதோடு.சைடு தொழிலாக, நர்சரி பள்ளி தொழில் தொடங்குவதற்க்கான ஆலோசனை களையும் வழங்கிவந்தார். கூடவே.தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் சங்கம் ஒன்றை ஆரம்பித்து.அதற்கு இவரே தலைவரனார். இந்தச் சங்கத்தால் பணமழை இவர்க்கு கொ்ட்டோ கொட்டுன்னு கொட்டியது.

மேலும் பணத்தை குவிக்க எண்ணி,பலரிடம் நர்சரி பள்ளி துவங்க அங்கீகாரம் வாங்கித் தருகிறேன் என்று பலரிடம் இலட்ச இலட்சமாக பணத்தைக் கறந்தார்.

தமிழகத்தில் பல கல்வி தொழில் நிறுவணங்களில் இவரும்,இவர் குடும்பத்தாரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

நர்சரி பள்ளி தொழில் தொடங்குவதற்க்காக இலட்சம் இலட்சமாக கொடுத்து ஏமாந்தவர்களின் புகாரால்  பண மோசடி வழக்கில் இந்த கல்வித் தந்தை திருச்சி மத்திய சிறையில் ஒய்வெடுத்து வருகிறார்.

இவரின் வழியிலே சென்ற  இவரது கட்சியின் தலைவர் எஸ்.ஆர் தேவரும் புதுக்கோட்டை சிறையில் ஓய்வெடுத்து வருகிற வேளையில்,காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மருமகன் செல்வராசுவின் புகரால் மீண்டும் சிறையில் ஓயவெக்க அணுமதிக்கப்பட்டுள்ளார்

சிறை. இருப்பவர்களுக்கு ஓய்வு அறை!!! இல்லாதவர்களுக்கு கொட்டடி!!!

6 கருத்துகள்:

  1. இப்படி கேடு கெட்ட சுயநல வியாதிகளின் கீழ் படித்தால் மாணாக்கரும் அவ் வண்ணமே ஆவார்கள் அல்லவா. இத்தகையோரால் தான் தரமற்ற தனியார் பள்ளிகள் காளாண் போல முளைத்து மொழியையும், விழுமியங்களையும் அழித்து விட்டன. மாணவர்கள் பலரும் சுயநலவாதிகளாய் மாற்றப்பட்டு குடியும் கற்பழிப்பும் கும்மாளுமாய் திகழ்கின்றனர். :(

    பதிலளிநீக்கு
  2. ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கருத்துரைக்கு நன்றி!விவரணன் நீலவண்ணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. கருத்துரைக்காத கரத்துக்கு சொந்தக்காரர் திண்டுக்கல் தனபாலரே நன்றி!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....