வியாழன் 03 2013

கொள்ளை காரரிடமிருந்து தப்பித்து கொலைகாரரிடம் உயிர்விட காத்திருக்கும் இந்திய கோவனாண்டிகள்.!!!


சுதநதிரம் பெற்றதாக சொல்லப்படும் காலத்திலிருந்து நீரோ மோடி, ஹீரோவான காலம்வரைக்கும் அணிந்திருந்த மேல் சட்டையிலிருந்து ஒவ்வொன்றாக பறி கொடுத்து கடைசியில் உயிரையும்பறிகொடுக்க காத்திருப்பது வேறு யாரமல்ல இந்தியாவில் வாழும் கோவனாண்டிகள்தான்.

அதெப்படி கோவனாண்டிகள் அவ்வளவு  ஏமாளிகளா...???

ஆமப்பா.....ஆமா....

பழைய தங்கத்துக்கு பாலீஸ் போட்டு தருவதாக ஏமாற்றும் பேர்வளிகளிடம் ஏமாந்தும், வீசியெறிந்ததால் கீழே கிடக்கும் பத்து ரூபாய்க்காக பத்தாயிரத்தை பறி கொடுத்து அலறுவதும் போல்தான்

ஆட்சியிலுள்ள பகாசூர கொள்ளையர்களுக்கு மாற்றாக,மகாசூர கொலைகாரர்கள் பவனி வருவதைக் கண்டு.

கொள்ளைக்காரர்களிடம் தவித்து சீரழிந்த கோவனாண்டிகள். இந்த கொலைகாரர்களின் எச்சில் ஒழகும் பேச்சிலும்,ஊதிப் பெருக்கும் ஊடகங்களின் மாயையிலும் மயங்கி, உன்மையென நம்பி..

 கொள்ளைக்காரர்களிடம் தங்கள் உடமையையும்,உரிமையையும் இழந்த பறி கொடுத்தவர்கள். காவு வாங்கும் கொலைகாரர்களிடம் மிஞ்சியிருக்கிற தங்கள் உயிரைவிட்டு கதி மோட்சம் அடைய காத்திருக்கிறார்கள் இந்திய கோவனாண்டிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...