பக்கங்கள்

Friday, October 04, 2013

துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமாம் மாமே..???ஏ.......மாமே......இங்கப்பாரு....... துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமாம்...மாமே....

என்னடா.......மாப்ளே   சொல்ற ..“துர்க்கைக்கு பால் கொடுத்தால்,குடும்பம் செழிக்குமா....?????????

ஆமா............மாமே   அப்படித்தான் .போட்டிருக்காங்கே.........

அப்போ...ஒங்....கக்கால.. குடுக்கச். சொல்வோம்டா....

அதுல்ல மாமே.............

விளக்கமா....... சொல்றா.........

நா........படிச்சு காம்மிக்றேன்..கவனமா..........கேளு.

வேலுரை சேர்ந்த  கோவிந்த சாமி என்ற வாசகர் கேட்டு இருக்காரு

பல தொழில்களை செய்து பார்த்துவிட்டேன. எல்லா தொழிலும் நஷ்டம்தான்  மிச்சம், கடன்களும்சேர்ந்துவிட்டன. குடும்பம் செழிக்க வழி கூறுங்கள் என்று

அதற்கு தீட்சர் சொன்ன வழிதான் இது. சிவாலய துர்க்கைக்கு 3 செவ்வாய் கிழமைகளில் தொடர்ச்சியா அபிஷேகத்திற்கு பால் கொடுங்கள் . இதோடு சமஸ்கிரதம் தெரிந்தவர்களிடம் சுலோகங்களை கற்று தினமும் 21 முறை கூறுங்கள் என்று வழி காட்டியிருக்கிறார்....மாமே....

ஏ.......ஏ.......ஏ..... நிறுத்துடா..... இது நமக்கில்லடா..... அந்தாளுக்குடா..

நாமளும் பல தொழில் செஞ்சும  நஷ்டம்தானே  மிச்சம்...மாமே.....

ஆமாடா.....இருந்தாலும்,அந்த  தீட்சர் ஊடால ஒரு கரடி விட்டிருக்கான் பாக்கலையா?

புரியலையே மாமே............

 துர்க்கைக்கு பால கூடக் கொடுத்திடலாம்டா, சமஸ்கிருத் கத்திகிட்டு புலம்ப முடியுமாடா.............???

பல தொழில் மாதி....இதையும் கத்திகிட்டா போச்சு மாமே.......

 ஏலேய்.........வெங்காயம்.....ஒங்கத்தா...ஒங்கப்பன்,எங்காத்தா.எங்கப்பன் சொத்து சுகம்முன்னு சேத்து வச்சிருந்தா .....நம்ம குடும்பமும்  துர்க்கைக்கு பால் கொடுக்காமலே செழிப்பா இருக்குமுடா.........நாமளும் சொத்து சேத்து வச்சுட்டு போனவங்கள நிணச்சு வழிபடலாம்டா.........


அதான் இல்லேன்னு போச்சே.......

அந்த தீட்சரு சொல்றதா நம்பினா...... இருக்குற இந்த பொழப்பு  போயிரும்டா மாப்பிளே.. பொழப்பே போகும்போது குடும்பம் எப்படிடா செழிக்கும்

 ஆமா...மாமே,

என்னடா........ஆமா...மாமே.........நல்லா யோசிச்சு பாருடா........

ஆமா..மாமே அந்த தீட்சரு கரடிதான் விட்டுருக்காரு. அத இந்த பேப்பரு காரனும்  உலாவ விடுறான். நம்மல மாதி இருக்கிறவங்கல  நல்லா வே கேனையானாக்குறாங்கே   மாமே...........

1 comment :

  1. பெத்த பிள்ளைக்கு பால் கொடுக்க வழியைக் கேட்டால் ,துர்க்கைக்கு பால் ஊற்றச் சொல்ற தீட்சிதர்... துர்க்கைக்கு பால் ஏஜெண்டா ?
    செத்த மொழியை கத்துகிட்டு நீங்களும் சாவுங்கடான்னு சொல்றாரோ ?

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!