சனி 05 2013

இதனால் சகல நிறுவனங்களுக்கு காவல்துறை தெரிவிப்பது என்னவென்றால்.....





பெரிய பெரிய முடுச்சு அவிக்கிகள்.மொள்ள மாரிகள், திருடர்கள், போக்கரிகள்,கொள்ளைக்காரர்கள்,கொலை காரர்கள், அங்கிகாரம்
பெற்ற சாதி வெறி  மற்றும் அரசியல் தலைவர்கள் போன்றவர்கள்,

மேற்கண்ட தொழிலை செய்பவர்களாக இருப்பதால் தக்க ஆதாரம் இருந்தும். அவர்கள் பெரிய தலைகளாக இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்ய  முடியாது. மேற்கண்டவர்களின் வாழ்வுக்கும் வசதிக்கும் எந்தவித பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்க்காகவே நாங்கள் பாதுகாப்பாக காவல் காத்து இருப்பதால்,

மேற்க் கண்டவர்கள் செய்யும் தொழிலுக்கு  போட்டியாக மேற்க்கண்டவர்களைப்போல் குறுக்கு சந்துவழியாக முன்னேற துடிக்கும்,சிறிய முடுச்சு அவிக்கி, மொள்ளமாரி, கேப்பாரி, போக்கிரி, கொள்ளக்காரன், கொலைகாரன்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்கும் பொருட்டும்.பொது அமைதிக்கு பங்கம் எற்படாதவாறு காக்கும் பொருட்டும்,

பொதுஇடங்களானபள்ளி,கல்லூரி,விடுதி.மருத்துவமனை,காய்கறி வளாகம்,விளையாட்டுத்திடல்,நகைக்கடைகள்,வங்கிகள்,
வழிபாட்டுத்தலங்கள்,தொழிற்சாலைகள்,பெட்ரோல்கடைகள்,
நூலகங்கள் பஸ்நிறத்தங்கள், பஸ்நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்போனற் அணைத்து இடங்களிலும்  கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேற்படி குறுக்கு சந்து தொழில் வழிக்காரர்களால் ஏற்ப்படும். திருட்டு,வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் பல
இடங்களில் நடைபெற்று வருகின்றன. எங்களால் சம்பந்தபட்ட
வர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும்.அப்பிராணி.சப்ராணிகளின் மீது பொய்வழக்கு  போடுவதால்,
நீதி மன்ற பிரச்சனை ஏற்ப்படுகின்றன. அதனால்  மேற்க்கண்ட  சகல நிறுவணங்களின் பொறுப்பாளர்கள் விரைந்து தாமதமின்றி,
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில், கண்காணிப்பு கேமரா பொறுத்தாத பொருப்பாளர்களின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும், மேலும்  பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில்  முகத்தை காட்டாமல் மறைத்துக்  கொண்டு நடமாடுபவர்கள் மீதும் வழக்கு பதியப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...